மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 22 ஜன 2020

பங்குகளைச் சீர் செய்யும் டாடா நிறுவனம்!

பங்குகளைச் சீர் செய்யும் டாடா நிறுவனம்!

டாடா குழுமத்தின் பங்குகளைச் சீர் செய்ய டாடா சன்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி ஒரு டாடா நிறுவனத்தில் மற்றொரு டாடா நிறுவனத்தின் பங்குகள் இருக்கும்பட்சத்தில் அதை வாங்க டாடா சன்ஸ் முடிவெடுத்துள்ளது.

தற்போது டாடா சன்ஸ் நிறுவனம் டாடா ஸ்டீலில் 28.2 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக 2.85 சதவிகிதப் பங்குகளை வாங்கவுள்ளது. இதன்மூலம் டாடா சன்ஸ் பங்குகள் 31.06 சதவிகிதமாக அதிகரிக்கும். டாடா சன்ஸ் வருகிற ஜூன் 23 அல்லது அதற்குப் பின்னர் பங்குகளை வாங்கவுள்ளது. என்ன விலைக்கு வாங்குகிறது என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை, பங்குச் சந்தையில் 455.75 ரூபாயில் முடிந்தது. இதேபோல டாடா ஸ்டீல் நிறுவனத்தில், டாடா மோட்டார்ஸ் 0.46 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon