மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

தினகரனை அழைப்போம்: திண்டுக்கல் சீனிவாசன்!

தினகரனை அழைப்போம்: திண்டுக்கல் சீனிவாசன்!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு டிடிவி தினகரனை அழைப்போம் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அம்மா அணியில் டிடிவி தினகரன் தரப்புக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே தெளிவான உறவு இல்லாத நிலை இருந்து வருகிறது. இருதரப்புகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. அதிமுக கட்சி சார்பில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் கட்சியின் துணைப்பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் சார்பில் நடக்கவேண்டும் என தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிமுக சார்பில் நடக்கவிருக்கும் இப்தார் விருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. எனவே இருதரப்புக்கும் இடையே புரிதல் இல்லாத குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. தினகரனுக்கு தன் ஆதரவு இருப்பதை ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி செய்திருந்தார். தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு டிடிவி தினகரன் அழைக்கப்படுவார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜூன் 18-ம் தேதி மதுரையில் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு டிடிவி தினரன் உள்பட அனைவரையும் நங்கள் அழைப்போம். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். இதுவரையில் 10 லட்சத்திற்கும் அதிகமான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளோம்” என அவர் கூறினார்.

அதிமுகவின் பொருளாளராக முக்கிய பொறுப்பு வகிக்கும் திண்டுக்கல் சீனிவாசன் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், அவரின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon