மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 26 பிப் 2020

யூடியூப்பில் ஹிட் அடித்த ‘ஹம்மா’ பாடல்!

யூடியூப்பில் ஹிட் அடித்த ‘ஹம்மா’ பாடல்!

1995ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘பாம்பே’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘அந்த அரபிக் கடலோரம்’ பாடல் பெரிய ஹிட் ஆனது. இப்போது கேட்டாலும் புதிதாக துள்ளல் மிகுந்த பாடலாக அது இருக்கிறது. இந்தப் பாடலை மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’யின் இந்தி ரீமேக்கில் ரீமிக்ஸ் செய்திருப்பார் ஏ.ஆர்.ரஹ்மான். பாலிவுட் இந்தப் பாடலை கொண்டாடித் தீர்த்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்தப் பாடலை சோனி நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியது. அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் பாடல் இருபது கோடிக்கும் அதிகமான (20,03,77,310) பார்வையாளர்களைக் கடந்து ஹிட் அடித்துள்ளது. இந்திய வீடியோ ஒன்று யூடியூப்பில் இந்த அளவு பார்வையாளர்களைச் சென்றது இதுவே முதன்முறை என்று சோனி நிறுவனம் நேற்று (ஜூன் 17) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளல் இசையோடு ஷ்ரதா கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூரின் நடனமும் பார்வையாளர்களை அதிக அளவில் சென்றடைய காரணமாய் இருந்துள்ளது.

‘ஹம்மா’ பாடல்

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon