மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

சி.பி.எஸ்.இ. ப்ளஸ் டூ மதிப்பெண் கூட்டலில் குளறுபடி!

சி.பி.எஸ்.இ. ப்ளஸ் டூ மதிப்பெண் கூட்டலில் குளறுபடி!

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், ப்ளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதற்கான முடிவு, கடந்த மே 28ஆம் தேதி வெளியானது. 10,678 பள்ளிகளைச் சேர்ந்த, 4.60 லட்சம் மாணவியர் உட்பட, 11 லட்ச மாணவர்கள் தேர்வெழுதினர். பல்வேறு நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அனைத்துப் பாடங்களிலும் 90 சதவிகித மதிப்பெண்ணைப் பெற்ற நிலையில், கணிதம் மற்றும் பொருளாதார பாடத்தில் மட்டும் 50 மற்றும் 60 சதவிகிதம் என்ற அளவிலேயே மதிப்பெண் பெற்றிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர். மறுகூட்டலுக்குப் பிறகு கணிதப் பாட மதிப்பெண் கூட்டலில் குளறுபடி நடந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ 60 மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் இந்தக் குளறுபடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த முகம்மது இன்பான் என்ற மாணவர் மற்ற பாடங்களில் 80 சதவிகிதப் மதிப்பெண் எடுத்த நிலையில் கணிதப் பாடத்தில் மட்டும் 50 மதிப்பெண் எடுத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மறு கூட்டலுக்குப் பிறகு அவர் கணிதத்தில் 90 மதிப்பெண் எடுத்தது தெரியவந்துள்ளது. இதுபோல, பொருளாதாரத்தில் 90 மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவருக்கு மறு கூட்டலில் 45 மதிப்பெண் வந்துள்ளது. இது மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து, மறு கூட்டலில் போடப்பட்ட மதிப்பெண்ணுடன் ஒப்பிடும்போது 100 முதல் 400 சதவிகிதம் இடைவெளி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்று மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தப் பலருக்கும், குறைந்த மதிப்பெண் போடப்பட்டது தெரியவந்துள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வு கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், மதிப்பெண் கூட்டல் செயல்முறைகளில் தவறுகள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மாணவர்களும் பெற்றோர்களும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் புகார் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. ப்ளஸ் டூ தேர்வில் மறு கூட்டலில் அதிகரித்த மதிப்பெண் விவரம்...

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon