மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

முன் செலுத்தும் வருமான வரி வசூல் அதிகரிப்பு!

முன் செலுத்தும் வருமான வரி வசூல் அதிகரிப்பு!

நடப்பு நிதி ஆண்டுக்கான முதல் தவணையில் முன் செலுத்தும் வருமான வரி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 26.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வருமான வரி வசூல் அதிகரித்து வருகிறது. ஜூன் 15ஆம் தேதி வரை வசூலான முன் செலுத்தும் வருமான வரி என்பது 26.2 சதவிகிதம் அதிகரித்து 1,01,024 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் 15இல் ரூ.80,075 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ நகரங்களைப் பொறுத்தவரை, மும்பை மண்டலத்தில் அதிகளவில் வரி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.9,614 கோடியாக இருந்த வருவாய் இந்த ஆண்டில் ரூ.22.884 கோடியாக உள்ளது. இது, 138 சதவிகித உயர்வாகும். நாட்டின் மூன்றில் ஒரு பங்கு நேரடி வரி மும்பை மண்டலத்தில் இருந்து வசூலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு, கடந்த ஆண்டு 8,344 கோடியாக இருந்த வரி வசூல் 38 சதவிகிதம் அதிகரித்து ரூ.11,582 கோடியாக உள்ளது. கொல்கத்தாவில் 7 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,084 கோடியாக உள்ளது. பெங்களூருவில் 6.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.14,923 கோடியாக உள்ளது.

அதேவேளையில், சென்னை மண்டலத்தில் நிகர வருவாய் வசூல் என்பது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.8,986 கோடியாக இருந்த சென்னை மண்டலத்தின் வருவாய் வசூல் இந்த ஆண்டில் ரூ.8,591 கோடியாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon