மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத் திட்டம்!

மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத் திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி வரும் 24ஆம் தேதி அரசு பயணமாக போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விஜய் பக்லே நேற்று ஜூன் 17ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வருகின்ற 24ஆம் தேதி போர்ச்சுகல் செல்லும் பிரதமர் மோடி, அதைத்தொடர்ந்து வரும் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் அமெரிக்கா செல்கிறார். அதன்பின்னர் அங்கிருந்து 27ஆம் தேதி நெதர்லாந்து சென்று அந்நாட்டு மன்னரைப் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்” என்று கூறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் 25ஆம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதையடுத்து 26ஆம் தேதி அதிபர் ட்ரம்ப்பை நேரில் சந்திக்கும் பிரதமர் மோடி, தீவிரவாத ஒழிப்பு, எச்-1 பி விசா நடைமுறையில் மாற்றம், கலாசாரம், வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உலகச் சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்கள் போன்றவை குறித்துப் பேசவுள்ளார்.

முன்னதாக, அதிபர் ட்ரம்ப் தம்மைச் சந்திக்க வருமாறு மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றப் பிறகு ட்ரம்ப்பை, மோடி முதன்முறையாகச் சந்தித்து பேசுகிறார்.

பின்னர், அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு வருகிற 27-ஆம் தேதி நெதர்லாந்து நாட்டுக்குச் செல்லும் அவர், அங்கிருந்து டெல்லி திரும்புகிறார்.

சனி, 17 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon