மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 நவ 2019

ஜி.எஸ்.டி: புதிய வீடுகளுக்கு 12% வரி!

ஜி.எஸ்.டி: புதிய வீடுகளுக்கு 12% வரி!

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வருகிற ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருக்கிறது. இதில், புதிதாக வீடு வாங்குவோருக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மாதாந்திரத் தவணை முறையில் வாங்கும் வீடுகளுக்குச் சேவைக் கட்டணமாக 4.5 சதவிகித வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரி ஜி.எஸ்.டி-யில் 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், மாதாந்திர தவணைத் தொகை அதிகரிக்கும் என்பதால், வீடு வாங்குவோர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து டி.எல்.எஃப். நிறுவனத் தலைவர் ராஜீவ் தல்வார் கூறுகையில், “அதிகமாக பல்வேறு வரிகள் விதிக்கப்படும் இந்த ரியல் எஸ்டேட் துறையில் ஒரே வகையாக 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்த வரியிலேயே நிலத்துக்கான தொகை மற்றும் அனைத்து வரிகளும் அடங்கிவிடுகிறது” என்று கூறுகிறார். இச்சலுகை அனைத்தும் ஜூலை மாதம் 1ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும் கட்டமைப்புத் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் கட்டுமானப் பணிகளுக்குப் பொருந்தாது. எனவே வீடு வாங்குபவர்கள் ஜூலை மாதம் 1ஆம் தேதிக்குப் பிறகு கட்டப்படும் வீடுகளை வாங்கினால் அதிகப் பயன்பெறலாம்.

சனி, 17 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon