மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 11 நவ 2019

மும்மொழி நாயகி லாவண்யா திரிபாதி!

மும்மொழி நாயகி லாவண்யா திரிபாதி!

சசிகுமார் நடித்த ‘பிரம்மன்’ படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. அந்தப்படம் வெற்றி பெறாததால் அடுத்து தெலுங்குக்குச் சென்றார். அங்கு, பல படங்கள் கைப்பற்றி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

நாகார்ஜூனா, அல்லு சிரிஷ், வருந்தேஜ், சர்வானந்த் என முக்கிய ஹீரோக்களுடன் நடித்துவந்த லாவண்யா திரிபாதி, தற்போது தமிழ், தெலுங்கில் சி.வி.குமார் இயக்கியுள்ள ‘மாயவன்’ திரைப்படத்தில் சந்தீப் கிஷானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சிவராஜ்குமார், சுதீப் நடிக்கும் ‘தி வில்லன்’ என்ற கன்னடப் படத்திலும் நடிக்கிறார். மேலும், ‘ராரண்டோவ் வேடுக சுதம்’ படத்தைத் தொடர்ந்து நாகசைதன்யா நடிக்கும் புதிய படத்திலும் அவருக்கு ஜோடியாகியிருக்கிறார். ஆந்திராவிலுள்ள அராகு பகுதியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆக, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார்.

சனி, 17 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon