மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

‘மெட்ரோ பெண்’ ரீமா கல்லிங்கல்!

‘மெட்ரோ பெண்’ ரீமா கல்லிங்கல்!

வெற்றிகரமாக கேரளாவில் மெட்ரோ ரயில் சேவை பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடங்கியது மெட்ரோ ரயில் சேவையை மட்டுமல்ல... மெட்ரோ ரயிலின் பின்னணியில் முழுக்க முழுக்க உருவாக இருக்கும் ‘அரபிக்கடலிண்டே ராணி’ என்கிற படத்தையும் சென்டிமென்ட்டாக இன்றே தொடங்கி இருக்கிறார்கள். ரீமா கல்லிங்கல் டைட்டில் ரோலில் நடிக்கும் இந்தப்படத்தைப் பிரபல இயக்குநர் எம்.பத்மகுமார் இயக்குகிறார்.

கொச்சி மக்களின் கனவான மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்க, அரசியல் ரீதியாக பல உள்வேலைகள்கூட நடந்தன. ஆனால், அவற்றை எல்லாம் எதிர்கொண்டு போராடி இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை கொச்சியில் செயல்படுத்த முழு மூச்சாகச் செயல்பட்டவர்தான் ஈ.ஸ்ரீதரன் என்பவர். ‘மெட்ரோ மேன்’ என மக்களால் அன்பாக அழைக்கப்படும் இவர், கொச்சி மெட்ரோ ஆலோசனை குழுவில் முக்கியமான பொறுப்பு வகிப்பவர். இன்று பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட அந்தப் பயணத்தில் அவருடன் பயணித்தவர்களில் இவரும் ஒருவர்.

இவரைத் தனது ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு ஒரு பெண் எப்படி இந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் பிரச்னைகளைச் சமாளித்து அதைச் சாத்தியமாக்குகிறாள் என்பதும்தான் படத்தின் கதையாம். ஈ.ஸ்ரீதரன் கேரக்டரில் மிக முக்கியமான நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் மட்டும் இப்போதைக்கு வெளியாகியிருக்கிறது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon