மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

கேமர்ஸ் ஸ்பெஷல்: சாம்சங்!

கேமர்ஸ் ஸ்பெஷல்: சாம்சங்!

தேவையைப் பொறுத்து கணினியின் monitor-களைப் பயன்படுத்திவரும் பலர் உள்ளனர். அதில் டிசைனர்கள் பலர் பெரிய அளவிலான monitor-களைப் பயன்படுத்தி, துல்லியமாகப் பணியாற்றுவது வழக்கம். அதற்காக பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு அளவுகளில் monitor-களை வெளியிட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக சாம்சங் நிறுவனமும் 49-இன்ச் QLED monitor-களை சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. பார்க்க டி.வி. போன்றே காட்சியளிக்கும் CHG90 என்ற monitor HDR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் டிசைன் செய்யும் நபர்கள் துல்லியமாக வடிவமைக்கலாம். 3840 x 1080 என்ற அளவுக்குத் துல்லியத் தன்மையை இந்த monitor கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி தத்ரூபமாக கேமர்ஸ் கேம்களை விளையாட இந்த monitor பயன்படும். அதிக தரமுள்ள கேம்களை விளையாட ஏதுவாக புதிய தொழில்நுட்பம்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 49 இன்ச் திரையளவு கொண்ட இதன் விலை ரூ.96,520 என்றும். 32 இன்ச் மற்றும் 27 இன்ச் monitor முறையே ரூ.45,002 மற்றும் ரூ.38,569 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon