மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: ஏழைகள் உயிர் வாழவே போராடும் பீகார் - 2

சிறப்புக் கட்டுரை: ஏழைகள் உயிர் வாழவே போராடும்  பீகார் - 2

லாலுவின் வருகை

1990இல் லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்கு வந்த பிறகு பீகார் மாநிலத்தைப் பற்றியிருந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட வாய்ப்பாக அமைந்தது. “பீகாரில் உள்ள பெரும்பாலான மக்கள் அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கிய காலம் அது” என்று பாட்னாவில் உள்ள AN Sinha Institute of Social Studiesஇல் பணியாற்றும் பேராசிரியர் டி.எம்.திவாகர் குறிப்பிடுகிறார். மேலும், “அதிகாரத்துவத்திடம் இருந்து அதிக கோரிக்கைகளை லாலுவால் முன்வைக்க முடிந்தது. இதன்மூலம் அவர், மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார்” என்று கூறுகிறார் அவர். இதனால், நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கும் அவர்களுக்கு எதிராக நடந்த வன்முறை மோதல்களுக்கும் இடையே ஓர் உடன்பாட்டை ஏற்படுத்த லாலுவால் முடிந்தது. ஆனாலும், அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு அரசின் நிர்வாகத் திறனை மேம்படுத்த முடியவில்லை. அதிகார வர்க்கத்தினர் உண்மையில் மோசமாகிவிட்டார்கள். அதிகாரத்துவத்துவச் சக்திகளை எதிர்கொள்வதே லாலுவின் மிக முக்கிய பணியாகிவிட்டது. உயர் சாதி அதிகாரத்துவ ஆதிக்கச் சக்திகள் அவரை ஆதரிக்கவில்லை. இதை நன்றாக உணர்ந்த அவர், அதைப் பலவீனப்படுத்த முயன்றார். ஆனால் லாலுவால் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து வேட்பாளர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்களுக்கான பதவிகள் காலியாகவே இருந்தன.

Institute of Development Studies at the University of Sussexஇன் பேராசிரியர்கள் சந்தோஷ் மேத்திவ் மற்றும் மைக் மோர். இவர்கள், ‘மாநில அரசின் வடிவமைப்பில் இயலாமை மற்றும் பீகாரின் கதையைப் புரிந்துகொள்வது’ என்ற தலைப்பில் 1996-க்கான அரசு பணியாளர் தேர்வு விவரங்களை பகுப்பாய்வு செய்தார்கள். அதில், “90,000 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் வெறும் 30,000 ஆசிரியர்களை அரசு தேர்வு செய்திருக்கிறது. மாணவர் - ஆசிரியர் விகிதம் 40:1 என்ற தேசிய விதிமுறைக்கு எதிராக ஏற்கெனவே 90:1 என்ற விகிதாச்சாரம்தான் பீகார் மாநிலத்தில் இருக்கிறது. இது 122:1 என்ற மோசமடைந்துள்ளது” என்று அவர்கள் எழுதுகிறார்கள்.

சுகாதாரத்துறையிலும் இதே கதைதான். அங்கே பணியாளர் தேர்வு நிறுத்தப்பட்டுவிட்டது. “ஆரம்ப சுகாதார நிலையங்களும் மருத்துவமனைகளும் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்திவிட்டன” என்று NGO Care-India’s healthcare நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ஸ்ரீதர் குறிப்பிடுகிறார். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் பிறநோயாளிகளின் எண்ணிக்கை மாதத்துக்கு 50 பேராகக் குறைந்துவிட்டது. மருந்துகளைக் கொள்முதல் செய்ய ஒரு நிறுவனம், மாநில மருத்துவமனைகள் நிர்வகிக்க ஒரு நிறுவனம் என அரசு அதன் பொது சுகாதார அமைப்பு இயங்குவதற்கான நிர்வாக தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்று பீகார் மாநில சுகாதாரத் துறையின் முன்னாள் முதன்மைச் செயலாளர் வியாஸ்ஜி திட்ட கமிஷனில் குறிப்பிட்டிருக்கிறார். லாலுவின் ஆட்சியின் போது சுகாதாரத்துறையில் உருமாற்றம் மிகக் குறைந்த அளவில் நடந்தது. ஆனாலும், ஏழைகள் அவரோடு இருந்தார்கள் என்று வியாஸ்ஜி கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது, “லாலுவின் ஆட்சி காலத்தில் நிலச் சீர்திருத்தங்கள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. அதன் ஒரு பகுதியைத்தான் அவரால் செய்ய முடிந்தது. ஏனென்றால் மேல் சாதியிலிருந்து மற்ற பின்தங்கிய வகுப்புகளுக்கு நில உரிமையை மாற்றம் செய்தது 1970-ல்தான் தொடங்கியது. இதன் அடிப்படையில்தான் ராஷ்டிரிய ஜனதா தளம் தன் ஆதரவு தளத்தை அமைத்தது. லாலுவின் சொந்தச் சாதியான யாதவ் இனத்தவர்தான் மதேபுரா மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நிலத்தை வைத்திருக்கிறார்கள்.

நிதிஷ்குமார் என்ன பெற்றுத் தந்தார்?

நிதிஷ்குமார் வியத்தகு மாறுபட்ட அணுகுமுறையுடன் ஆட்சிக்கு வந்தார். அதிகாரத்துவத்தைப் பலவீனப்படுத்தியது மற்றும் முறைசாரா அரசியல் நெட்வொர்க்குகள் மூலம் ஆட்சி நடத்தினார் லாலு. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ‘முக்கிய குழு’ மூலம் செயல்பட்டு, அதிகார அரசியல் வர்க்கத்தை வலுக்கட்டாயமாகப் பலவீனப்படுத்துவதன் மூலம் தாழ்த்தப்பட்டோரின் அதிகாரத்துவத்தைப் புதுப்பிக்க முயன்றார் நிதிஷ்குமார்” என்று கூறுகிறார் வியாஸ்ஜி. இது ஒரு மையப்படுத்தப்பட்ட, உயர்மட்ட மாதிரியாக இருந்தது. நிதிஷ் ஆட்சிக்கு வந்ததும் பீகாரே மாறிவிட்டது என்ற தோற்றத்தை தந்தது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. நிதிஷ் குர்மி இனத்தைச் சேர்ந்தவர். அந்த இனம் யாதவ் இனத்தைப் போல் சிறிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இனம். பீகார் மக்கள் தொகையில் குர்மி இனத்தவர்கள் வெறும் 3.5 சதவிகிதத்தினரே இருக்கின்றனர். நிதிஷ் சக்திவாய்ந்த அதிகார வர்க்கத்தின் ஆதரவை நம்பவில்லை. அதற்குப் பதிலாக, அவர் ஒரு தளத்தை உருவாக்க உறுதியான முன்னேற்றங்களை ஏற்படுத்த வேண்டியிருந்தது. நிதிஷ்குமார் தொடங்கத்தில் எடுத்த முக்கிய முடிவுகள் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தின. “நிதிஷ் ஊழலற்ற அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கினார். நேர்மையான அரசு செயலாளர்களோடு அவர் இணைந்து பணியாற்றி இதைச் சாதித்தார்” என்று விட்சோ எழுதுகிறார். அதிகார வர்க்கம் யாதவை கண்டு அஞ்சியது, அவரைப் பின்னால் எடை போட்டுவிட்டது. மத்திய அரசில் பணி புரிந்த மூத்த அதிகாரி ஒருவர் நிதிஷ் குமாரைப் பற்றி இப்படி விவரிக்கிறார். “நிதிஷ் குமார் ஒரு அரசியல்வாதி என்பதை விட கேபினட் செயலாளர் போலவே பணியாற்றினார். குமார் முதன்முறையாக பீகார் மாநில மாணவிகளுக்குச் சைக்கிள் வழங்கினார். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. நிதிஷ்குமார் சட்டவிரோத ஆயுதங்களைக் கைப்பற்றினார். ஆட் கடத்தல் போன்ற குற்றங்கள் வெகுவாக குறைந்துவிட்டன. பீகார் மாநிலத்தில் உள்ள நகரங்கள் இரவில் போதுமான பாதுகாப்பைப் பெற்றன” என்று கூறுகிறார் குப்தா.

“2001இன் கணக்கெடுப்பின்படி சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் தேவைகளை அரசு வரையறுத்தது. மருத்துவர்கள் பணியமர்த்துவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தியது. புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. அதேநேரத்தில், அரசு சுகாதாரத்துறையின் பின் திட்ட நிர்வாகத்திலும் வேலை செய்யத் தொடங்கியது. உதாரணமாக மருந்து கொள்முதலைச் சீர்திருத்த முயற்சிக்கிறது” என்று கூறுகிறார் முன்னாள் சுகாதாரத்துறை செயலரான வியாஸ்ஜி.

2011இல் குமார் அறிவித்த திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து முக்கிய துறையினருக்காகவும் இதேபோன்ற மாதிரிகள் உருவாக்கப்பட்டன என்று மானவ் விகாஸ் திட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. சுகாதாரம், கல்வி, தொழிலாளர் மேம்பாடு, தொழில், சமூகம் என பல துறைகளில் நிதிஷ்குமார் திட்டமிட்டு பணியாற்றினார் என்று கூறுகிறார் வியாஸ்ஜி. சுகாதாரம், குழந்தை இறப்பு விகிதம், தாய் இறப்பு விகிதம், மொத்த கருவுறுதல் வீதம், ஊட்டச்சத்து குறைவு, குழந்தை திருமணம் மற்றும் துப்புரவு ஆகிய துறைகளிலும் அதிக கவனம் செலுத்தியது நிதிஷ் அரசு.

முடிவு என்ன?

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் மாநிலம் கலவையான முடிவைப் பெற்றுள்ளது. லாலுவின் ஆட்சி காலத்தில் இருந்தே ஏழைகளின் மிக முக்கியமான பிரச்னைகளில் இந்த மாநிலம் மெதுவாக முன்னேறி வருகிறது. நில உடமை தொடர்ந்து ஆதிக்க உயர்சாதி அதிகார வர்க்கத்தினரால் வளைக்கப்படுகிறது. பெரிய விவசாயிகள் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். மசாஃபூர் ரத்னொளி கிராமத்தில், மஃபினா பேகம் மற்றும் பலர் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற சட்டத்தின் கீழ் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். 1,500 குடும்பங்கள் வாழும் பஞ்சாயத்துக்குச் சொந்தமான நிலத்தை 10-20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மட்டுமே அனுபவித்து வருகின்றன. அவர்களிடம் இருந்து குத்தகைக்கு விவசாயம் செய்யும் ஏழை விவசாயிகள் விளைச்சலில் பாதியைக் குத்தகையாகக் கொடுக்க வேண்டும். இதனால்தான் பீகாரில் ஏழைகளுக்கு நில மறுசீரமைப்பு முக்கியம் என்று பலர் நம்புகிறார்கள்.

நிதிஷ் குமார், ஓய்வுபெற்ற நீதிபதி டி பந்தோபத்யாயின் கீழ் ஒரு நிலச்சீர்திருத்த ஆணையத்தை நியமித்தார். ஆனால், ஏனோ அதன் பரிந்துரையைச் செயல்படுத்த அவர் தவறிவிட்டார். நிதிஷ்குமார் கடந்த 12 ஆண்டுகளில் பி.ஜே.பி மற்றும் ராஷ்டிரிய ஜனதாதள் கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்தினார். ஆனால், இந்த ஆட்சி நில உடைமையாளர்களுக்கே ஆதரவாகச் செயல்பட்டது. நாலந்தாவுக்கு அருகில் நிதிஷ்குமாரின் சொந்த சாதியினரான, குர்மிஸ்கள்கூட குறிப்பிட்ட நிலங்களை உடைமையாகக் கொண்டுள்ளார்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் பேகத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வலியுறுத்துகிறார். காரணம் அவர் வீட்டு பொருளாதாரம் அதை நம்பியே இருக்கிறது. “நூறு நாள் வேலை வாய்ப்பு கிடைத்தால் அதன் மூலம் 17, 700 ரூபாய் வருமானம் எங்களுக்கு கிடைக்கும்” என்கிறார் பேகம். ஆனால், பீகாரில் இதுதான் பெரிய முரண்பாடு. 2014இல் பேகத்துக்குத் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு நாள் கூட வேலை கிடைக்கவில்லை. 2015இல் 20 நாள்கள் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் நமது செய்தியாளர் பேகத்தைச் சந்திக்கும் வரை அவருக்கு அதற்கான கூலி கிட்டவில்லை. முதியோர் ஓய்வூதியம் போன்ற பிற சலுகைகளும் யாருக்கும் இங்கே கிடைக்கவில்லை என்பது பேகத்தின் குற்றச்சாட்டு.

இவை அனைத்தும் மீண்டும் பழைய கேள்விக்கு நம்மை இட்டுச் செல்கிறது. முஸ்லிம்கள், தலித்துகள் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய சாதியினரை ஆதரிக்கின்ற ஓர் அரசாங்கம் ஏன் அவர்களின் பிரச்னையை இதுவரை தீர்க்கவில்லை?

இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகம் இந்தக் கேள்விக்கான விடையை வழங்க முற்படுகிறது. பீகாரில் ஆட்சி தோல்வியடைந்த வரலாற்றைக்கூறும் ஒரு தொடரில் இது முதல் பகுதி.

இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகத்தை Ear to the Ground project hereல் படியுங்கள்.

- எம். ராஜசேகர்

தமிழில்: வேட்டை பெருமாள்

சிறப்புக் கட்டுரை: ஏழைகள் உயிர் வாழவே போராடும் பீகார் - 1

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon