மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 18 நவ 2019

இன்றைய ஸ்பெஷல்: வட மலபார் இறால் கறி

இன்றைய ஸ்பெஷல்: வட மலபார் இறால் கறி

தேவையான பொருள்கள்:

செதில் நீக்கிய சுத்தமாக்கப்பட்ட நடுத்தர அளவு இறால் - 50

சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட மாங்காய் - 1

இஞ்சி – 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 5 (நறுக்கியது)

கிரேவி செய்ய தேவையான பொருள்கள்

தேங்காய் (துருவியது) - 1

மிளகாய்தூள் – தேவையான அளவு

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

வெந்தயத்தூள் - அரை தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 8 லிருந்து 10

கறிவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை

ஒரு மண் பாத்திரத்தில் இறாலைப் போடவும். அதோடு நறுக்கி வைத்த மாங்காய் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் பாத்திரத்தை மூடிவைத்து சிறிது வேக விடவும். இறால் வெந்ததும் அதோடு அரைத்து வைத்த மசாலாவைத் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து நன்கு வேக விடவும். கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பின்னர் மிதமான தீயில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து அதோடு சிறிது எண்ணெய் ஊற்றி வேக விடவும். இப்போது சுவையான இறால் கறி பரிமாறத் தயாராகிவிடும்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon