மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

முதல்வராகும் தகுதி ஸ்டாலினுக்கே: கனிமொழி

முதல்வராகும் தகுதி ஸ்டாலினுக்கே: கனிமொழி

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சிவ ப்ரித்தி மருத்துவமனையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முகாம் சனிக்கிழமை (நேற்று) நடந்தது. இந்த முகாமில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தை ஆளும் தகுதியும், திறமையும் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் உள்ளது. இதுதொடர்பாக நிறைய ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் அவர்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகப் பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

அதேபோல், தமிழகத்தின் கல்வி, உயர்கல்வி, தொழில்துறை, மருத்துவத்துறை ஆகியவை மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. இது திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியின் போது சாத்தியமானது” என்று அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon