மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

அமெரிக்காவைச் சேர்ந்த இயக்குநரும் நடிகருமான Peter Bogdanovich 1939ஆம் ஆண்டு பிறந்தார். இவர் திரைப்பட விமர்சகராகவும் திரைப்பட வரலாற்று ஆய்வாளராகவும் உள்ளார். 1960-களின் மத்தியில் இருந்து 1980-களின் தொடக்கக் காலம் வரை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கிய New Hollywood சினிமாவை இவர் Martin Scorsese, Francis Ford Coppola உள்ளிட்ட இயக்குநர்கள் முன்னெடுத்து சென்றனர். 1971இல் வெளியாகிய The Last Picture Show என்ற இவரது திரைப்படம் உலகம் முழுக்க வரவேற்பை பெற்றது. புதிய இயக்குநர்கள் மேல் Peter Bogdanovich பின்வருமாறு விமர்சனத்தை முன்வைக்கிறார்.

விளம்பரப் படங்களை இயக்குபவர்கள், மியூசிக் வீடியோக்களை இயக்குபவர்கள் தற்போது அதிக அளவில் திரைப்படம் எடுக்க வருகின்றனர். அவர்களது படங்களை பார்க்கிறேன். அதில் சினிமா இலக்கணம் பற்றிய புரிதல் துளியும் இல்லை. காட்சி ரீதியாக ஒரு கதையை எப்படி சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. படம் முழுக்க ‘கட்’ மட்டுமே அதிகமாக உபயோகிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon