மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 44)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 44)

‘உனக்கு பாய் ஃப்ரெண்டு இருக்காரா’ என்று மல்லி கேட்டதும், உலகளந்தான் பதிலளித்தார்.

‘எனக்கே கேர்ள் ஃப்ரெண்டு இருக்கும்போது ஷமித்ராவுக்கு இல்லாம இருக்குமா? இது என்ன அதரப்பழசான கேள்வி’ என்றார் தாத்தா. மேலும் ‘அல்ரெடி இருக்கா இல்லையான்னு எல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கக்கூடாது’ என்று சொல்லி கண் சிமிட்டினார்.

ஷமித்ரா பொதுவாக சிரித்துவைத்தாள்.

‘சாரி, சும்மா ஃபன்னியாத்தான் கேட்டேன்’ என்ற மல்லி, தன் மொபைல் எண்ணை ஷமித்ராவுக்கு வாலண்டியராக கொடுத்தான். சேமித்துக்கொண்ட ஷமித்ரா குட்நைட் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

இன்னும் சில வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன.

வீட்டுக்குள் நுழையும்போது பார்ட்டி ஆரம்பித்திருந்தது. எல்லோரும் புதுமுகங்கள். டிஸ்க் ஜாக்கி நீர்த்தி கூட இன்று காணக் கிடைக்கவில்லை. ஆனால் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. விதேஷே ப்ளே செய்து இருப்பான்போல.

பொதுவாக, அனைவருக்கும் ஹாய் சொல்லியபடி ஷமித்ரா அந்த இடத்தை கடக்க முயல, விதேஷ் ஷமித்ராவை நிற்க வைத்து, ‘மை சிஸ்டர் ஷமித்ரா’ என்று அறிமுகப்படுத்தினான்.

பலரும் ஹாய் சொன்னர்கள். அதில் ஸ்போர்டீவான ப்ளேசர் + டீ ஷர்ட் அணிந்திருந்த இளைஞன் மட்டும் முன்வந்து, ‘ஐ ஆம் ஸ்யாம் பிரகாஷ்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, குறும்புச் சிரிப்புடன் கையை நீட்டினான். கண்கள் ஷமித்ராவின் கண்களை பார்த்துக்கொண்டு இருந்தது.

கைகொடுத்த ஷமித்ரா, மீண்டும் விலகி நடக்க ஆரம்பித்தாள். பின்னாலேயே வந்த விதேஷ், ‘ரெஃப்ரஷ் பண்ணிட்டு, பார்ட்டிக்கு வந்துடு’ என்றான்.

‘இன்னிக்கி மூட் இல்லண்ணா’ என்றாள்.

‘இட்ஸ் எ மேனர்ஸ், கெஸ்ட் அவமானப்படுத்தினதா நினைப்பங்க ஷமி’

‘எனக்கு அவங்களை யாருன்னே தெரியாது. அதும் இல்லாம எனக்கு ஒரு இண்டிபெண்டன்ஸி இல்லையா? தலைவலிக்கிது வேற’

‘தலைவலின்னு ஏன் முன்னமே சொல்லல? சும்மா சாக்குதான சொல்ற’

‘எனக்கு எங்கெங்க வலிக்கிதுன்னு உன்கிட்ட சொல்லிட்டு இருக்கணுமா? அப்பதான் பர்மிஷன் கொடுப்பியா?’

‘நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி டென்ஷன் ஆவுற ஷமி ? கூல் கூல். ஜஸ்ட் பார்ட்டிக்கு வந்து 10 மினிட்ஸ் ஸ்பெண்ட் பண்ணிட்டு போயிடு, ஓக்கே வா?’

‘ஓகே’ என்றபடியே, விரைந்து நடந்தாள் ஷமித்ரா தன் அறையை நோக்கி.

தன் அறையில் போய் கொஞ்சநேரம் படுத்துக்கொண்ட ஷமித்ராவுக்கு இப்போது அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவிடம் பேசிக்கொண்டே, அம்மாவின் சமையலை சாப்பிட்டுவிட்டு அம்மா பக்கத்தில் படுத்துக்கொள்ள ஆசைப்பட்டாள்.

சீக்கிரம் பார்ட்டிக்கு போய்விட்டு வந்தால், நிம்மதியாக தூங்கலாம் என்று முடிவு செய்தவள், முகத்தை அலம்பிக்கொண்டு, லைட்டாக மேக் அப் போட்டுக்கொண்டு இருந்தாள். உடை இன்னும் முடிவாகவில்லை. பழைய பிரேசியரையும் பேண்டியையும் கழட்டி துவைக்கும் இடத்தில் போட்டவள், புதிய இன்னர்ஸ் மட்டும் அணிந்துகொண்டு மேக் அப் போட்டுக்கொண்டு இருந்தாள்.

மெதுவாகத்தான் உள்ளே நுழைந்தான் ஸ்யாம் பிரகாஷ். ஆனால் மேக் அப்பில் கவனம் இருந்ததால் ஷமித்ரா கவனிக்கவில்லை. கவனித்த அடுத்த கணம் கடுப்பானாள்.

‘கெட் அவுட்’ என்று எரிச்சலுடன் சொல்லியவள், படுக்கை மீது கிடந்த துண்டை எடுத்து தன்மேல் பொறுமையாக சுற்றிக்கொண்டாள்.

‘ஐ ஆம் சாரி’ என்று ஸ்யாம் ஏதோ சொல்ல வர,

‘கெட் அவுட்டுன்னு சொன்னேன்’ என்றாள் ஷமித்ரா, அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டே.

‘விதேஷ்தான் உன்னை கூட்டிவரச் சொன்னான்’ என்று சொல்லிக்கொண்டே முன்னேறி கேஷுவலாக ஷமித்ராவின் தோளில் கை வைத்தான் ஸ்யாம்.

அவனது கையை தட்டிவிட்ட ஷமித்ரா, பொறுமையாக அதேசமயம் நிதானமாக, ‘ஏண்டா பன்னி, அறிவுகெட்ட முண்டமா நீ? நாய் மாதிரி எங்க வேணா நுழைஞ்சி வந்துடுவியா? இப்ப நீ வெளில போலைன்னா, அசிங்கம் ஆயிடும்’ என்றவள், பாத் ரூமுக்குள் புகுந்து டாய்லெட் க்ளீன் செய்யும் பிரஷ்ஷை எடுத்துக்கொண்டு வந்தாள். அதான் கைக்கு கிடைத்தது. அதைப் பார்த்து துணுக்குற்ற ஸ்யாம்,

‘ஹேய், நான் சொல்றதை புரிஞ்சிக்கோ, விதேஷ் கூட்டிட்டு வரச்……’

டாய்லெட் பிரஷ்ஷால் ஸ்யாம் மண்டையில் படீர் படீரென்று நான்கு அடிகள் விழுந்துவிட்டிருந்தன.

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30|நாள் 31|நாள் 32|நாள் 33|நாள் 34|நாள் 35|நாள் 36|நாள் 37|நாள் 38|நாள் 39|நாள் 40|நாள் 41|நாள் 41|நாள் 42|நாள் 43

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon