மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 11 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 35)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 35)

ஓவியம்: ரஞ்சித் பரஞ்சோதி

இளக்காரமாக விதேஷ் சிரித்தது எரிச்சலூட்டினாலும், சாந்தவி பக்குவமாகவே பதில் அளித்தாள். “செக்ஸுன்னு சொன்னா, வெறும் செக்ஸ் இல்ல விதேஷ். அதுல நிறைய விஷயம் சம்பந்தப்பட்டு இருக்கு” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சாந்தவி. என்ன விஷயம் தெரியுமா? கல்யாணம் வேணாம், லிவிங்க் டுகதர் போதும்னு சொல்றதுல ரொம்ப பேரு, லிவிங்க் டுகதரையே கல்யாண வாழ்க்கை மாதிரிதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. தாலி மட்டும் இல்லை, அவ்ளோதான் வித்தியாசம். இன்னும் கேட்டா, கல்யாணத்தை விட கஷ்டமான வாழ்கை வாழ்ந்துட்டு இருக்காங்க. கல்யாண வாழ்க்கையை விட எக்கச்சக்க இன் செக்யூர்ட் ஃபீலிங்க், அடிக்கடி சண்டை, சந்தேகம், பொறாமை இப்பிடி சொல்லிட்டே போகலாம்”.

“ஆமாம், அப்படியும் இருக்குறாங்கதான்” என்றாள் சாந்தவி .

“என்ன வேணும்னு தெளிவா டிசைட் பண்ணிக்கணும். சோசியல் செக்யூரிட்டி, உறவுகளின் தேவை, எதிர்கால பயம், இதெல்லாம் இருந்தாலோ, தேவைப்பட்டாலோ சும்மா வீரம் பேசிட்டு இல்லாம கல்யாணம் பண்ணிக்கலாம். அதுல நிறைய விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அதுக்கும் ரெடியா இருக்கணும்.

இதெல்லாம் வேணும் , ஆனா அதே சமயத்துல லிவிங்க் டுக்தர்ன்றது ஏமாத்திக்கிறதுதான். பல லிவிங்க் டுகதர்ல இன்னும் பொண்ணு , சமைச்சி போட்டுகிட்டு துவைச்சி போட்டுகிட்டுதான் இருக்கா தெரியுமா?”

“தெரியும்தான்” என்று ஒப்புக்கொண்டாள் சாந்தவி.

“சிம்பிள்... ரெண்டு பேரு ஃபிரெண்ட்ஸ் மாதிரி வாழ்ந்து பார்க்கலாம். என்னை அவளை பாக்காதே, இவளைப் பாக்காதேன்னு கண்ட்ரோல் பண்ணாதே”.

“அப்ப என்னையும் நீ கண்ட்ரோல் பண்ணக் கூடாது”.

“நான் எப்பவாச்சும் பண்றேன்னு சொன்னேனா? ஏதாச்சும் கண்டிஷன் போட்டேனா? ஆரம்பத்தில் இருந்து நீதான் போட்டுகிட்டு இருக்க.”

“ஆமா விதேஷ், எனக்குத்தான் பயம். நீ எப்ப வேணா என்னை விட்டுட்டு எவ கூட வேணாலும் போயிடுவன்ற பயம் தான்.”

“அந்த பயத்தோட ஒருத்தர் கூட ரிலேஷன்ஷிப்ல வரணும்னு என்ன அவசியம்? ஓப்பனா சொல்லணும்னா , நீ என் கூட ரிலேஷன்ஷிப்ல வருவதற்கு ‘செக்ஸை’ பகடைக் காயா வச்ச. அது எனக்கு பிடிக்கலை. ஆபாசமா இருந்திச்சி. ஒண்ணு தூய்மையான காதலோட, உருகி உருகி காதலிச்சி செக்ஸ் வச்சிக்கலாம். இல்ல , ஒருத்தர் கூட பிடிச்சா செக்ஸ் வச்சிக்கலாம். அது என்ன, நாம லிவிங்க் டுகதரா இருப்போம்னு சொல்லு, அப்பத்தான் படுத்துப்பேன்னு சொல்றது? அப்ப உனக்கு என்ன தேவை ? என் வீடு, கார், என் பணம். அதுக்கு நீ உன் உடம்பை பணயம் வச்சி கண்டிஷன் போடற. கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதே, இதுக்கும் ப்ராஸ்டிட்டியூஷனுக்கும் என்ன வித்தியாசம்?”

குடித்துகொண்டு இருக்கும்போது , பொது விஷயங்களைப் பத்தி பேசினால் நன்றாக போய்க்கொண்டு இருக்கும். அதிலேயே சண்டைகள் வர வாய்ப்புண்டு. எப்போதும் மதுவின் போதை ஏற ஏற பர்ஸனல் விஷயங்களை பேச ஆரம்பித்து விடுகிறார்கள். எப்போதோ மனதில் தோன்றிய கசப்புகள், வக்கிரங்கள் மதுவின் மித மிஞ்சிய போதையில் வெளிவந்து விடுகின்றன. சில உறவுகளே இதனால் கெட்டொழிந்தும் போய் விடுகின்றன.

‘இதுக்கும் பிராஸ்டிடியூஷனுக்கும் என்ன வித்தியாசம்?’ என்று கேட்டதும், சாந்தவிக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேறியது. “உனக்கு எல்லாமே அப்படித்தான் தோணும்டா. பணம் இருக்குற திமிரு, அப்படித்தான் பேச வைக்கும். உங்க அம்மா உன்னை அப்படித்தான் வளர்த்திருக்காங்க போலருக்கு. உன் தங்கச்சி ஷமித்ரா பண்றதும் தேவடியாத்தனம் தானே” என்று சாந்தவியும் போதையில் வார்த்தைகளை தெறிக்க விட்டாள்.

எழுந்து சாந்தவியை அறையப் போய் விட்டான் விதேஷ்.

அருகில் சென்று கையை ஓங்கிய விதேஷ், “இதுவரைக்கும், நான் எந்த பொண்ணையும் கை நீட்டி அடிச்சதில்லை, அதனால நீ தப்பிச்ச. ஒழுங்கு மரியாதையா பொட்டியை கட்டிகிட்டு கிளம்பிடு. இப்பவே போடீன்னு சொல்ல முடியும். போனாப்போகட்டும்னு விட்டு வைக்கிறேன். காலைல என் கண்ல நீ தெரியக்கூடாது” என்று சொல்லியவன், கிளாஸை தூக்கி எறிந்து விட்டு, கோபமாக வீட்டுக்குள் சென்றான்.

“ப்ளடி பாஸ்டர்ட்” என்று முணுமுணுத்துக்கொண்டாள் சாந்தவி.

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30|நாள் 31|நாள் 32|நாள் 33|நாள் 34

செவ்வாய், 11 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon