மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 33)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 33)

ஓவியம் : ரஞ்சித் பரஞ்சோதி

சாந்தவி தள்ளிவிட்டதும் சிரித்தான் விதேஷ். “யேய், நான் உன்னைச் சொல்லலைடீ, பொதுவா கம்பேர் பண்ணி சொன்னேன். நீ ரொம்ப யுனிக், உன்கிட்ட எல்லா குவாலிடீஸும் இருக்கு” என்றான்.

“இந்த சமாளிப்பு எல்லாம் வேண்டாம், நீங்க எவ்ளோ சுயநலம் தெரியுமா? நீங்கள்லாம் பல விஷயங்களில் எங்களை விட படு மட்டம்” என்றாள் சாந்தவி.

“தெரியுமே, இருந்தாலும் உன் வாயால சொல்லு சாந்தவி. ஆம்பளைங்க எதுல எல்லாம் மட்டம்னு உன் வாயால கேட்டு தெரிஞ்சுக்கிறேன்” என்றான்.

“குடும்பத்துக்கும் உங்களுக்கும் சம்மந்தமே இல்லை. சம்பாதிச்சுக் குடுக்கறதைத் தவிர குடும்பத்துக்கும் ஆம்பளைங்களுக்கும் சம்மந்தமே இல்லை. வெளில சொசைட்டில மட்டும் நல்ல பேர் எடுத்தா போதும் ஆம்பளைங்களுக்கு. வீட்ல அவ்ளோ கெட்டப்பேரு, ஆனா அதைப்பத்தி கவலையே இல்லை. வீட்டுக்குள்ள எல்லார்கிட்டயும் சுடுசுடுன்னு பேச வேண்டியது. வெளில இளிச்சி இளிச்சி பேச வேண்டியது. வெளில யார் அவமானப்படுத்தினாலும், திட்டினாலும், அதையெல்லாம் வாங்கிட்டு வந்து வீட்ல காட்ட வேண்டியது.”

“அப்புறம்?”

“வீட்டைப் பத்தி கொஞ்சம்கூட பொறுப்பு உணர்வே இல்லாம இருக்கறது. வீட்ல எந்த வேலையும் செய்யாம இருக்குறது. ஒண்ணு சொல்லட்டுமா? பெண்கள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இல்லைன்னா, இங்க ஃபேமிலின்ற கான்சப்டே இல்லாம போயிருக்கும். ஒரேயொரு குடும்பம் உருவானதுலகூட ஆம்பளைங்க பங்கு இல்லை”.

“ம்ம்…”

“எல்லா குடும்பத்தையும் உருவாக்கினது பெண்கள்தான். அந்த பெண்கள் உருவாக்கின சிஸ்டத்துல, பெண்களே கஷ்டப்பட்டு மெயின்டெயின் பண்ணிட்டு இருக்குற குடும்பம்ன்ற சிஸ்டத்துல ஒரு துரும்பையும் அசைக்காத ஆண்கள் ஜஸ்ட் எஞ்சாய் மட்டும் பண்ணிக்கிறீங்க”.

“குடும்பம்ன்ற கான்சப்டே இர்ரிட்டேட்டிங்க்தான். அதுல நாங்க எப்பிடி எஞ்சாய் பண்ண முடியும்?”

“குடும்பத்தை எஞ்சாய் பண்றீங்கன்னு சொல்லலை. அந்த சிஸ்டத்துல, எதெல்லாம் அட்வாண்டேஜோ அதை மட்டும் நீங்க எஞ்சாய் பண்ணிக்கிறீங்க”.

“எப்பிடி சொல்ற?”

“இப்ப, வெளில அலுத்துட்டா, உங்களுக்கு ரெஸ்ட் எடுக்க ஒரு ஷெல்டர் வேணும். அந்த ஷெல்டர்ல உங்களுக்கு பணிவிடை செய்ய ஆளுங்க இருப்பாங்க. போதும்னு தோணிச்சின்னா, எப்ப வேணா திரும்ப வெளில ஓடிப்போய்டுவீங்க”.

“ஓகே...”

“அப்புறம், உங்களுக்கு குழந்தை வேணும். அதாவது வாரிசு வேணும். சேத்து வச்ச சொத்துக்காகவும், உங்க ஆண்மையை நிரூபிக்கவும் குழந்தை வேணும். ஆனா, அதை வளத்து எடுக்குறதுல உங்க பங்கு ஒண்ணுமே இருக்காது. பொண்டாட்டி கர்ப்பமா இருக்கும்போது எப்பவாச்சும் ரெண்டு ஜூஸ் போட்டு குடுக்குறது. ஒண்ணு ரெண்டு தடவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போய் மொபைலை நோண்டிட்டு ஒக்காந்து இருக்கிறது அவ்ளோதான் உங்க பங்கு. இதுவும் ஒரு அடையாளத்துக்கு மட்டும்தான் செய்வீங்க”.

“கரெக்ட்தான்”.

“புள்ளை பொறந்ததும், பெண்களேதான் ராப்பகலா கண் முழிச்சி அதை வளக்கணும். கர்ப்பத்தின் போதும், புள்ளை பொறந்ததுக்கு அப்புறமும் ஏற்படும் ஹார்மோனல் சேஞ்சஸ்கூட உங்களுக்கு தெரியாது, அக்கறையில்லை. இப்பல்லாம் பொண்ணுங்களுக்கு கோவம் வரும், டிப்ரஷன் வரும், குழந்தை ராத்திரி தூங்காம கத்திட்டு இருக்கும்போது எழுந்து எழுந்து பார்த்துக்கும்போது பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கும் தெரியுமா?”

“ம்ம்ம்...”

“அப்புறம் அது வளர்ந்து ‘அப்பா’ன்னு கூப்பிட ஆரம்பிக்கும்போது தூக்கிட்டு பைக்ல ரெண்டு ரவுண்டு போவீங்க, அவ்ளோதான் மேட்டர். அதுலயும், குழந்தைய ஒழுங்கா வளக்கத் தெரியுதா? குழந்தையை விட உனக்கு என்னடி வேற வேலைன்னு எக்கச்சக்க பஞ்ச் டயலாக் விடுவீங்க பாருங்க, அதாங்க ஹைலைட்.”

“யே யப்பா… நாலு ஜென்மம் பொண்ணா பொறந்து ஆம்பளைங்களை அனுபவிச்ச மாதிரி புட்டுபுட்டு வக்கிறியே” என்றவன், மீண்டும் இருவருக்கும் ரவுண்ட் கலந்தான்.

அப்போது ஷமித்ரா இவர்களை நோக்கி வருவது தெரிந்தது.

ஷமித்ரா அருகில் வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.

“ஷமி, ஃபுட் ஆர்டர் பண்ணி வச்சிருக்கேன்... சாப்படறியா?” என்றான் விதேஷ்.

கொஞ்ச நேரம் அண்ணா, அண் டைம்ல தூங்க ஆரம்பிச்சுட்டேன், ஒரு மாதிரி இருக்கு. நானும் ஒரு ரவுண்ட் எடுத்துக்கறேன், அப்புறமா சாப்படறேன்” என்றாள் ஷமித்ரா.

“ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கியே ஷமி” என்றவன், “சந்தன்தான் உன் மைண்டை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கான். இவ்ளோ நாள் ஒரு டிஸ்டர்பன்ஸ் தொடர்ந்து வரக்கூடாது. மைண்டுக்கு நல்லது இல்லை. நான் ஒண்ணு சொல்லட்டுமா” என்றான்.

“சொல்லுண்ணா….”

“சந்தன் நிச்சயம் செத்துடுவான். அவன் செத்துட்டான்னு நினைச்சி ஒரேடியா அழுது தீர்த்துடு” என்றான்.

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30|நாள் 31|நாள் 32

ஞாயிறு, 9 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon