மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 1 ஏப் 2017

உயிர் மெய் 2 - அராத்து - நாள் - 25

உயிர் மெய் 2 - அராத்து - நாள் - 25

விதேஷ் சிரோன்யாவுக்காக காத்திருந்தபோது, சந்தனின் தம்பி கதிரிடம் இருந்து போன் வந்தது. அவர்கள் திண்டிவனம் தாண்டி வந்துகொண்டிருப்பதாகவும், ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாகவும் தெரிவித்தான்.

‘தாம்பரம் வந்துட்டு கால் பண்ணுங்க, வழி சொல்றேன்’ என்று கூறி கட் செய்தான் விதேஷ்.

சிரோன்யா மீண்டும் விதேஷை அழைத்தாள். சென்று சந்தித்தான்.

எடுத்தவுடன் ‘டிரங்கன் டிரைவா?’ என்றாள் கடுகடுப்புடன்.

தலைகவிழ்ந்தான் விதேஷ்.

‘குடிச்சித் தொலையட்டும். ஏன் இப்படி வண்டி ஓட்டி? ச்சே, எவ்ளோ கஷ்டம்? குடிச்சவனுக்கு, அவன் ஃபேமிலிக்கு, போலீஸுக்கு? இங்க ஹாஸ்பிடல்ல உண்மையா நோய்வாய்ப்பட்டு இருக்கறவங்கள பாக்கறதுக்கே நேரம் இல்ல, இதுல இதுபோல வேற தேவையில்லாத தலைவலி’ என்றாள் சிரோன்யா.

‘சாரி டாக்டர்’ என்றான் விதேஷ்.

‘இட்ஸ் ஓக்கே, நீங்க என்னா பண்ணுவீங்க’ என்றவள், ‘சாரி, டூ சே திஸ், ஹீ ஈஸ் இன் கோமா’ என்றாள்.

‘ஓ காட், எவ்ளோ நாள் இப்படி இருப்பான் டாக்டர்?’

‘அட்மிட் ஆனப்ப, cgs (coma glasgow scale) 5 இருந்திச்சி. இன்னிக்கி 3 ஆயிடிச்சி. சோ, ரொம்ப கஷ்டம், ஐ ஆம் சாரி’ என்றாள்.

‘யூ மீன்…… டாக்டர்?’

‘டவுட்தான் விதேஷ்’ என்றாள்.

சில நொடிகள் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

‘போலீஸ்கிட்ட பேசிடுங்க, சீஃப் டாக்டர்கிட்ட பேச ஏற்பாடு பண்றேன். இரண்டு நாள் பாக்கலாம். அப்புறம் என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணிக்கோங்க’ என்றாள் சிரோன்யா.

‘தேங்க் யூ டாக்டர்’ என்று விதேஷ் சொல்லவும், அவன் குரல் லேசாக உடைந்திருந்தது.

தாம்பரம் வந்துவிட்டதாக சந்தனின் தம்பி சொல்ல, அவர்களுக்கு வழி சொல்லிவிட்டு, வீட்டுக்கு புறப்பட்டான் சந்தன்.

அவர்களை வரவேற்று, ஆசுவாசப்படுத்தி, ‘ரெஃப்ரஷ் செஞ்சிக்கோங்க, ஹாஸ்பிடல் போய் பாக்கலாம்’ என்று சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தான்.

சந்தனின் தம்பி கதிர் மட்டும், ‘எதாவது பெரிய பிரச்சனையாண்ணா’ என்று விதேஷிடம் கேட்டான்.

‘சொல்றேன் கதிர்’ என்று அவனையும் அனுப்பி வைத்தான். அவன் தயங்கி, தனியாக அமர்ந்திருந்த ஷமித்ராவைக் காட்டி, ‘அவங்க ஷமித்ராதானே’ என்றான்.

‘விதேஷ், ஆச்சரியமாக ‘எப்படித் தெரியும்? பாத்திருக்கியா...’ என்றான்.

‘அண்ணன் போட்டோல காட்டிருக்காரு’ என்றான். சொல்லிவிட்டு அறைக்குச் சென்றான்.

அவர்கள் ரெடியாகி வந்ததும், விதேஷ் பக்குவமாக எல்லாவற்றையும் மெதுவாகச் சொன்னான். ஷமித்ராவிடமும், சாந்தவியை வைத்துக்கொண்டு தெளிவாகச் சொன்னான். டவுட்தான் என்பதைச் சொல்லவில்லை. ‘கோமால இருக்கான். எப்ப வெளிவருவான்னு தெரியல’ என்றான்.

நான்கைந்து நாட்கள் மெதுவாகவும் சோம்பலாகவும் சோகமாகவும் நகர்ந்தன. கடமைக்கு சாப்பிட்டார்கள், அரைகுறையாக தூங்கினார்கள். தினமும் மருத்துவமனைக்குச் சென்று வந்தார்கள்.

பெற்றோர்களும் தம்பியும் அழுது முடித்திருந்தார்கள். ஷமித்ராவுக்கு கண்கள் சிவப்பாகவும், கன்னங்கள் உப்பியும் காணப்பட்டன. நடுவில் விதேஷும் சாந்தவியும் மட்டும் ஒரு நாள் தண்ணி அடித்தார்கள்.

சந்தனை இங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து, அவர்கள் ஊரில் இருக்கும் மருத்துவமனையில் வைத்து பார்த்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

ஆம்புலன்ஸ் கிளம்பும்போது, தானும் உடன் செல்வதாக ஷமித்ரா ஏறிக்கொண்டாள்.

‘தேவைன்னா எப்ப வேண்டுமென்றாலும் கூப்பிடுங்க’ என்று சிரோன்யா கூறினாள். அவளின் மொபைல் நம்பரை சந்தனின் தம்பி கதிர் வாங்கிக் கொண்டான்.

சென்னையைத் தாண்டி ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது. ஷமித்ராவுக்கு தனிமை உணர்ச்சி கொன்று போட்டது. அழமுடியாத அளவுக்கு உடலும் மனமும் வறட்சியாக இருந்தன. இந்த ஆம்புலன்ஸ் ஆக்ஸிடெண்ட் ஆகி தானும் செத்துவிடக்கூடாதா என்று யோசித்தாள்.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13 நாள் 14 நாள் 15 நாள் 16 நாள் 17 நாள் 18 நாள் 19 நாள் 20

நாள் 21 நாள் 22 நாள் 23 நாள் 24

சனி, 1 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon