மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

கமல் மீது வழக்கு பதிவு!

கமல் மீது வழக்கு பதிவு!

தமது சகோதரர் சந்திரஹாசன் மறைவையொட்டி துயரத்தில் இருக்கும் கமல்ஹாசனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அவர் மீது இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி வழக்கு பதிவு செய்ய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நடிகர் கமல் ஹாசன், மகாபாரதத்தில் திரௌபதியை வைத்து பாண்டவர்கள் சூதாட்டம் செய்வதாக வரும் பகுதியை கடுமையாக விமர்சனம் செய்தார். இது இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என சில நாட்களுக்கு முன்பு இந்து மக்கள் கட்சியினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

இதையடுத்து நடிகர் கமல் ஹாசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இன்னும் சில மணி நேரத்தில் இந்த மனு மீதான விசாரணை ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்த விஷயத்தை முன் வைத்து சமூக வலைத்தளங்களிலும் விவாதங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon