மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் - 10)

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் - 10)

ஓவியம் : சசி மாரீஸ்

நிம்மதியாக ஷார்ட்ஸ் மாற்றிக்கொண்டான் சந்தன். சந்தன் உள்ளாடையையும் கழட்டிப்போட்டு ஷார்ட்ஸ் மாற்றிக்கொள்வதைப் பார்த்த ஷமித்ரா,

‘ஏண்டா, அடுத்தவங்க ஷார்ட்ஸை போடும்போது இன்னர்ஸ் போட்டுக்கணும்னுகூட தெரியாதா?’ என்றாள்.

‘இன்னிக்கி கொஞ்சம் டைட்டான ஜட்டி போட்டுகிட்டேண்டீ, அதான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டுமேன்னு’ என்றான் சந்தன்.

‘குண்டாயிட்டடா, அதான். பியர் பியரா குடிச்சித் தள்றியே? ஜிம் மெம்பர்ஷிப் வாங்கினியே? போய் எவ்ளோ நாளாச்சி’ என்று கேட்டாள் ஷமித்ரா .

‘அதெல்லாம் கேட்காதே ஷமி, இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸா இருக்குடீ’ என்று சொல்லியபடி குதித்து படுக்கையில் குப்புறக் கவிழ்ந்தான் சந்தன்.

ஷமித்ரா தன்னுடைய மேலாடையைக் களைந்துவிட்டு பிரேசியருடன் இருந்தாள். ஷார்ட்ஸ் மாற்றிக்கொண்டாள். கால் அலம்பிவிட்டு துண்டில் துடைத்துக்கொண்டு கட்டிலில் வந்து படுத்தாள்.

ஷமித்ரா அணிந்திருந்தது ஸ்போர்ட்ஸ் பிரேசியர். அதனால் ஆபாசமாகத் தெரியவில்லை. தற்போதுதான் மதிய உணவு உண்டிருந்தாலும், வயிறு பெருத்துக் காணப்படாமல், ஒட்டியே இருந்தது.

‘கொஞ்சம் கால் அமுக்கி விடறியா சந்தன்’ என்றாள்.

திரும்பிப் படுத்த சந்தன், ‘டூ மினிட்ஸ்’ என்றபடி ஷமித்ராவின் மேல் கையைப் போட்டான். அப்படியே இடை, தோள், கழுத்து என அமுக்கிவிட்டான்.

‘இங்கெல்லாம் வேண்டாம், காலை அமுக்குடா, வலிக்கிது’ என்றாள் ஷமித்ரா.

எழுந்து வாகாக அமர்ந்துகொண்டு ஷமித்ராவின் பாதத்தை முதலில் அமுக்க ஆரம்பித்தான். ஷமித்ரா கண்ணை மூடிக்கொண்டாள்.

பாதங்களை அமுக்கிவிட்டபின்பு, கால்களை அமுக்கிக்கொண்டே,

‘உங்கண்ணன் எதோ வீடியோ எடுத்திருக்கேன், அப்பா அம்மாவுக்கு அனுப்பிடுவேன்னு ஏதோ சொல்லிட்டு இருந்தாரே என்னடீ’ என்று கேட்டான்.

‘அதுவா, விண்மிதான்னு எங்க அண்ணனுக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட். அவ எதோ இவனை ஏமாத்திட்டாபோல, அதான் அவளோட வீடியோவை அவங்க அப்பா அம்மாவுக்கு அனுப்பப்போறதா ஒளறிக்கிட்டு இருக்கான்’

‘சீரியஸா லவ் பண்ணியிருப்பார்போல….’

‘இல்லடா, நீ வேற. விண்மிதா இவனுக்கு பத்தோ பன்னெண்டாவது கேர்ள் ஃபிரண்டோ இருக்கலாம். சீரியஸால்லாம் லவ் பண்ணி இருக்கமாட்டான். சொந்தத்திலேயே அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் ஒரே சமயத்துல மெயிண்டெயின் பண்ணி வீடு வரைக்கும் பிரச்னை ஆயிடிச்சி’ என்றாள்.

‘ஓ…பெரிய ஆளுதான். இண்ட்ரெஸ்டிங்கான ஆளா இருப்பார் போலருக்கே!’

‘நீ ரொம்ப அவன்கூட பழகாதடா… உன்னையும் கெடுத்துடுவான்’ ஷமித்ரா சந்தனுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, ஷமித்ராவின் மொபைல் அடித்தது.

சாந்தவிதான் பேசினாள்.

‘என்னடீ ஷமி, மெசேஜுக்கு ரிப்ளையே இல்லை. எங்கடீ இருக்க?’

‘சாரி டீ, அண்ணன் வீட்லதான் இருக்கேன். லஞ்சுக்கு போயிட்டுவந்தேன், அதான் மெசேஜ்க்கு ரிப்ளை குடுக்க முடியலை.’

‘இட்ஸ் ஓ.கே… ஈவ்னிங் எங்க போற? என்ன பிளான்?’

‘ம்ம்... சாந்தவி, நீ ஈவ்னிங் எங்க அண்ணன் வீட்டுக்கு வறியா? ஒரு பார்ட்டி இருக்கு.’

‘ஓ..கிரேட், வாவ். வந்துட்டா போச்சு. அட்ரஸ் கூகிள் மேப் ஷேர் பண்ணு வந்துடறேன்.’

போனை கட் பண்ணிவிட்டு, சந்தனிடம் சொன்னாள் ஷமித்ரா. ‘எங்கண்ணனைப் பத்தி தெரியாம, இவன்கிட்ட வந்து மாட்டிக்க அலையறா சாந்தவி, பாவம்!’

*

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

வெள்ளி, 17 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon