மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

பிப்ரவரி: புண்ணாக்கு ஏற்றுமதி உயர்வு!

பிப்ரவரி: புண்ணாக்கு ஏற்றுமதி உயர்வு!

கடந்த பிப்ரவரி மாதத்தில் 2.63 லட்சம் டன் புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு 116 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் 11 (ஏப்ரல் - பிப்ரவரி) மாதங்களில் புண்ணாக்கு ஏற்றுமதி 16.73 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 14.23 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 2.63 லட்சம் டன் புண்ணாக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட 1.22 லட்சம் டன்னை விட 116 சதவிகிதம் உயர்வாகும். ஏற்றுமதியான புண்ணாக்கில் சோயா புண்ணாக்கின் பங்கு 2.07 லட்சமாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இதன் பங்கு 30,000 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடுகு, பருத்தி விதை, எள் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுத்தபிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடைத் தீவனமாகவும், விலை நிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலிருந்து தென்கொரியா, வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய மற்றும் மேலைநாடுகளுக்கும் புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon