மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

நான் எங்கும் போவதாக இல்லை : கங்கனா

நான் எங்கும் போவதாக இல்லை : கங்கனா

கங்கனா எப்போதுமே ‘பெண்’ மற்றும் ‘பாதிக்கப்பட்டவர்’ எனும் அந்தஸ்தை வைத்து பேசுகிறார் என, கரன் ஜோஹர் குற்றச்சாட்டு சுமத்தியதற்கு பதிலளித்திருக்கிறார் கங்கனா.

மும்பை மிரர் பத்திரிகைக்கு பேட்டியளித்த கங்கனா, ‘ஒரு பெண் பெண்ணாக இருப்பதால், அவரை அவமானப்படுத்த வேண்டும் என ஏன், கரன் ஜோஹர் நினைக்கிறார்? இந்த மாதிரியான பேச்சு பெண்கள் அனைவரையும் இழிவுபடுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக, பலவீனமான பெண்களை அவமானப்படுத்துகிறது. என்னால் முடிந்த அத்தனையையும் வைத்து நான் போராடுவேன். இது, கரன் ஜோஹருக்கு எதிரான மோதல் கிடையாது. ஆணாதிக்கத்துக்கு எதிரான மோதல். சினிமாத்துறை இந்தியர்கள் அத்தனை பேருக்குமானது. குறிப்பாக, என்னைப்போல ஏழை பெற்றோர்களை உடையவர்களுக்கானது. நான் பணியிடத்தில்தான் கற்றுக்கொண்டேன். அங்கு கிடைத்த சம்பளத்தில்தான் படிக்கிறேன். என்னை இங்கிருந்து போகச் சொல்வதற்கு கரன் ஜோஹருக்கு தகுதியில்லை. நான் எங்கேயும் போகப்போவதில்லை, மிஸ்டர் ஜோஹர்’ எனப் பேசியிருக்கிறார்.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon