மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

டிஸ்னி எல்ஸா கொடுத்த ஊக்கம்!

டிஸ்னி எல்ஸா கொடுத்த ஊக்கம்!

டிஸ்னி கதாபாத்திரம் எல்ஸா, சிறு பெண் ஒருத்திக்கு ஊக்கமாக இருக்கிறார்.

அல்பினிசத்தோடு பிறந்த குழந்தை அர்லியா. மெலனின் சுரக்காத காரணத்தால் இவளுக்கு, தலைமுடி முதல் பாதம் வரை வெண்பனி நிறத்திலேயே இருக்கும். அல்பினிசம் காரணமாக பார்வை குறைபாடுகளும் இருக்கும். பிறரிலிருந்து வித்தியாசமாக இருக்கும் காரணத்தால், அர்லியா சாலையில் நடந்துபோகும்போதெல்லாம் அவரையும் அவர் முடியையும் தொட்டுப் பார்க்க பிறர் ஆர்வமாக வருவர். இது அர்லியாவுக்கு, தான் வித்தியாசமானவள் என்பதை உணர்த்தியது. சாதாரண குழந்தைகல்போல அல்லாமல் தன்மீது கவனம் குவிவதால் இயல்பிலிருந்து மாறியிருக்கத் தொடங்கினாள் அர்லியா.

ஒரு நாள் சாலையில் சென்ற சிறுமி ஒருத்தி அர்லியா, எல்ஸாபோலவே இருப்பதாகக் கூறுகிறாள். அர்லியா அப்போது வரை ‘ஃப்ரோசன்’ படத்தைப் பார்த்திருக்கவில்லை. அதன்பிறகு ஃப்ரோசன் படம் பார்த்த அர்லியாவுக்கு அதில் வரும் எல்ஸா தன்னைப்போலவே இருப்பதாக ஆச்சரியம். இழந்த ஊக்கம் மீண்டும் கிடைத்திருக்கிறது. அடிக்கடி எல்ஸாவாக உடையணிந்து விளையாடவும் செய்கிறார் அர்லியா. சமீபத்தில், அவளுக்குப் பிறந்த தங்கையும் அல்பினிசத்தோடு இருக்கிறாள் என்பது கூடுதல் கொண்டாட்டமாக இருக்கிறது.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon