மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

ஆந்திராவில் தமிழர்கள் மீது கொடூர தாக்குதல்!

ஆந்திராவில் தமிழர்கள் மீது கொடூர தாக்குதல்!

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீது அம்மாநில போலீசார் கொடூரமான தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செம்மரம் வெட்டியதாகக் கூறி ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை செம்மரம் வெட்டியதாகக் கூறி கைது செய்வதும் தாக்குதல்கள் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. அதேபோல், இன்றும் செம்மரம் வெட்டியதாகக் கூறி சேஷாசலம் வனப்பகுதியில் 180 தமிழர்களை ஆந்திரப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்து வாகனங்களிலோ அல்லது வேன்களிலோ அழைத்துச் செல்லாமல் பிளாஸ்டிக் தார்பாய் கொண்டு மூடிய லாரிக்குள் மிருகங்களை கூண்டுக்குள் அடைப்பதுபோல் அடைத்துவைத்து மூச்சுகூட விட முடியாத நிலையில் கொண்டு சென்றுள்ளனர். பிறகு அவர்களை சிறைச்சாலைக்குள் கழுத்தைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்று ஒரே அறைக்குள் அடைத்து, ஆடையை கட்டாயமாகக் கழற்றி அரை நிர்வாணமாக்கி கொடூரமாக பெல்ட் மற்றும் பிளாஸ்டிக் தடிகளைக் கொண்டும் அலற அலற தாக்கி துன்புறுத்தியுள்ளனர். அவர்களை லாரியிலிருந்து அழைத்துச் செல்வது முதல் ஆடையைக் கழற்றி துன்புறுத்துவது வரை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அவர்கள் தாக்கும்போது சாதாரண தடிகளைப் பயன்படுத்தாமல் பிளாஸ்டிக் தடிகளை பயன்படுத்துகின்றனர். ஏனென்றால், சாதாரண தடிகளில் தாக்கும்போது சிறிது பாதிப்புகள் மட்டுமே ஏற்படும். ஆனால் பிளாஸ்டிக் தடிகள் கொண்டு தாக்கினால் உடலின் உட்பகுதியிலுள்ள சதைகள் கிழிந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. இந்தச் சம்பவம் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon