மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

போராட்டக்காரர்கள் போர்வையில் பயங்கரவாதிகள் : பொன்.ராதாகிருஷ்ணன்

போராட்டக்காரர்கள் போர்வையில் பயங்கரவாதிகள் : பொன்.ராதாகிருஷ்ணன்

மீனவர்களின் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் போர்வையில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ‘கச்சத்தீவை மீட்பது தமிழர்களின் உரிமை. கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அதேநேரத்தில், கச்சத்தீவை மீட்பது மட்டும் தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வாக அமையாது. மீனவர்களின் போராட்டத்தில் அரசியல் கட்சிகள் கலந்துகொண்டு நிலைமையை மேலும் மோசமடைய செய்யக்கூடாது. அரசியல் கட்சிகள் மோசமான விளையாட்டை விளையாடி வருகின்றன. போராட்டக்காரர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு அளிப்பது மோசமான விளைவை ஏற்படுத்தும். கொல்லப்பட்ட மீனவருக்கு நிதியுதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் போர்வையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக சந்தேகம் வருகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எச்சரிக்கை விடுத்தேன்’ என்று தெரிவித்தார்.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon