மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

முன்னணி நிறுவனங்களை தோற்கடித்த oppo!

முன்னணி நிறுவனங்களை தோற்கடித்த oppo!

பல்வேறு மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் அவர்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டு, அவ்வப்போது புதிய மாடல்களை வெளியிட்டபடி இருக்கின்றன. அதேபோல் பல்வேறு புதிய நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக பயன்கொண்ட மாடல்களை வெளியிட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர் என்பது ஒருபுறம் இருந்தாலும், முன்னணி நிறுவனங்களின் மொபைல்களைவிட புதிய நிறுவனங்களின் மாடல்கள் சிறப்பாக இருக்கின்றன என்பதாலும் மக்கள் அதை நாடிச் செல்கின்றனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு சீனாவில் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமான oppo கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே இந்தியாவில் தனது அதிகாரபூர்வமான விற்பனையைத் தொடங்கியது. சிறந்த கேமரா வசதிகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் மாடல்கள் அனைத்தும் மற்ற நிறுவனங்களின் மொபைல்களுக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளது. அதன்படி, இந்த வருடம் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் oppo நிறுவனம் 5x dual cemara zooming வசதியுடன் புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்தது அந்த நிறுவனம். அதன் சோதனை அங்கு நடைபெற்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் அவர்கள் பிற முன்னணி நிறுவனங்களின் மாடல்களை அதனுடன் ஒப்பிட்டு முடிவுகளை வெளியிட்டனர். முடிவில் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் துல்லியமான கேமரா வசதியை oppo நிறுவனத்தின் இந்த மாடல் கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக இந்த நிறுவனம் இரண்டு கேமரா வசதிகளைக் கொண்ட மொபைல் ஒன்றை வடிவமைத்துள்ளது. இதன் வெளியீடு விரைவில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சில நிறுவனங்களின் மாடல்கள் 5x zooming வசதியைக் கொண்டிருந்தாலும், அதைக் காட்டிலும் இந்த மாடலின் image stabilaization 40 சதவிகிதம் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், இரண்டு கேமராக்களும் 2.5cm இடைவேளியில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். இந்த மாடல் கேமரா பிரியர்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon