மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை: டி.எம்.வி.நம்பூதிரி

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை: டி.எம்.வி.நம்பூதிரி

சென்னை கலை இயக்க கலைஞரான டி.எம்.வி.நம்பூதிரி 1925ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். 1954ஆம் ஆண்டு சென்னை கவின் கலைக் கலூரியில் படிப்பை முடித்த இவர் 1960ஆம் ஆண்டு மலையாள வார இதழான மாத்ருபூமியில் ஓவியராகப் பணியாற்றினார். 1982ஆம் ஆண்டு மற்றொரு வார இதழான கள்ளகமுதியிலும் ஓவியராகப் பணியாற்றினார். அதே ஆண்டு 'Morden Family on a Scooter' என்ற தலைப்பில் சென்னை சோழமண்டல ஓவியர்கள் கிராமத்தில் நடைபெற்ற அகில இந்திய சிற்பிகளுக்கான முகாமில் பெரிய அளவிலான சிமெண்ட் சிற்பத்தை செய்தார்.

1988 முதல் 90 வரை ‘மைத்துனா’ என்ற கிரானைட் சிற்பத்தை சர்வதேச சிற்பிகளுக்கான முகாமில் சோழ மண்டல ஓவியர்களின் கிராமத்தில் உள்ள திறந்தவெளி சிற்ப பூங்காவில் படைத்தார்.

1997ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை சித்தரிக்கும்விதமாக 500 அடி நீளமும் 8 அடி உயரமும் கொண்ட ஓவியத்தை வரைந்தார்.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon