மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

ஜி.வி.பிரகாஷ்குமார் : முன்னணி இயக்குநர்களின் கதாநாயகர்!

ஜி.வி.பிரகாஷ்குமார் : முன்னணி இயக்குநர்களின் கதாநாயகர்!

நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியபின்னர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஏராளமான விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தது. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் பெண்களை கொச்சைப்படுத்தும்விதமாக இருந்த வசனங்களும் காட்சிகளும் சர்ச்சைகளை கிளப்பின. இருப்பினும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவந்த இவர் புருஸ்லீ, அடங்காதே, ஐங்கரன் போன்ற பல படங்களை தற்போது கைவசம் வைத்திருந்தாலும் இயக்குநர் பாலாவின் நாச்சியார் படத்தில் நடிக்க இருக்கும் தகவலும் போஸ்டரும் வெளியாகியபின்னர் பரவலாக கவனம் பெற்றார். மற்றொரு முன்னணி இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் படத்திலும் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தி தற்போது உறுதிசெய்யப்பட்டிருப்பதோடு படத்தின் டைட்டில் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. இந்தப் படத்துக்கு பாண்டிராஜ் 'செம' என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த அறிமுக நடிகை ஆர்த்தனா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் யோகிபாபு, மன்சூர் அலிகான், கோவை சரளா உள்பட பலர் நடிக்கவுள்ளனர். உண்மைச் சம்பவம் ஒன்றை மையப்படுத்தி இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளதாகவும், முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜனா என்ற புதிய வில்லன் நடிகரை அறிமுகம் செய்வதாகவும் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். பசங்க புரடொக்சன்ஸ் மற்றும் பி.ரவிச்சந்திரன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon