மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

நடிகைகள் சர்ச்சை : தன்சிகா

நடிகைகள் சர்ச்சை : தன்சிகா

கடந்த சில நாட்களாக ட்விட்டரில் ஆபாச படங்கள் உலா வருவதை பார்க்க அருவருப்பாக இருப்பதாகவும் இதனால் ட்விட்டர் பக்கம் போகவே பயமாக இருப்பதாகவும் நடிகை தன்ஷிகா தெரிவித்துள்ளார். பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா, அனிருத், ஹன்சிகா உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அதன் பிறகு ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சஞ்சிதா ஷெட்டி, அனுயா உள்ளிட்ட சில நடிகைகளின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் ட்விட்டருக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. விளக்கம் பலான வீடியோக்கள், புகைப்படங்களில் இருந்த பிரபலங்களில் சிலர் பதறியடித்துக் கொண்டு ட்விட்டரில் விளக்கம் அளித்தனர். தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றனர். தன்ஷிகா ட்விட்டரில் கடந்த சில நாட்களாக ஆபாச படங்களாக வருகின்றன.இதனால் ட்விட்டர் பக்கம் போகவே பயமாகவும், அருவருப்பாகவும் உள்ளது. எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் சர்ச்சை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றும் கூறியிருக்கிறார் தன்ஷிகா.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon