மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவினருக்கு டெட் தேர்வு இலவச பயிற்சி!

எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவினருக்கு டெட் தேர்வு  இலவச பயிற்சி!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த 6 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தேர்வாளர்கள் தயாராகி கொண்டி இருக்கின்றனர். ஒருசிலர் வீட்டிலிருந்தபடியே படிக்கின்றனர். மற்றவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று படித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி தாட்கோ மூலம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. ஆசிரியர் பட்டப்படிப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழநாடு செய்தி - மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் http://training.tahdco.com என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இதுபோன்று தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகான இலவச பயிற்சி, வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், நடத்தப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,தமிழகத்தில், அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர் பணி நியமனத்துக்கு, 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமானது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை, தனியார் பள்ளிகளில் நியமிக்க தமிழக பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது. இதனால், அனைத்து ஆசிரியர்களும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon