மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

நீட் தேர்வு: உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு!

நீட் தேர்வு: உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு!

25 வயதுக்கு மேற்பட்டவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்காதது ஏன்? என, இந்திய மருத்துவக் கவுன்சில் சி.பி.எஸ்.இ.,க்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக பல குழப்பங்கள் நிலவிவந்த நிலையில், டெல்லியில் கடந்த மாதம் யூஜிசி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்கள் 25 வயது வரை தேர்வை எழுதலாம் இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரை தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம் எனத் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை 25 வயது வரைதான் எழுத முடியும் என்னும் வயது உச்சவரம்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 25 வயதுக்கு மேற்பட்டவர்களை தேர்வு எழுத அனுமதிக்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, தேர்வு எழுதுவது தொடர்பாக நீட் சட்டத்தில் விதிமுறைகள் எதுவும் விதிக்கவில்லை. வயது தொடர்பாக சி.பி.எஸ்.இ., தான் விதிமுறைகளை விதித்துள்ளது என இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளித்தது. அதைத் தொடர்ந்து, வயது உச்சவரம்பு குறித்து உரிய விளக்கம் அளிக்கவேண்டும். இல்லையெனில் அந்த விதிமுறை நீக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon