மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

ரொனால்டோ பெனால்டி கிக் : புதிய சாதனை!

ரொனால்டோ பெனால்டி கிக் : புதிய சாதனை!

கால்பந்து உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பல்வேறு சாதனைகளை படைத்தவண்ணம் இருக்கிறார். அதில், இவர் பெனால்டி கிக் முறையில் அதிக கோல் அடித்த சாதனையும் அடங்கும். அதன்படி, நேற்று நடைபெற்ற லா லீகா கோப்பை போட்டியில் ரியல் மாட்ரிட் அணி, வில்லரில் அணியுடன் விளையாடிய போட்டியில் ரொனால்டோ பெனால்டி முறையில் கோல் ஒன்று அடித்தார். மேலும் மொத்தம் 3 கோல்களை அடித்த ரியல் மாட்ரிட் அணி 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

ரொனால்டோ அடித்த அந்த பெனால்டி கோல் மூலம் அவர் லா லீகா தொடரில் மொத்தம் 57 பெனால்டி கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்தார். இதற்குமுன்னர் 56 கோல்களுடன், மாட்ரிட் அணியின் முன்னாள் வீரரான ஹுகோ சாஞ்சக்ஸ் சாதனையை சமன் செய்தார். தற்போது, இவரின் 57 கோல்கள்தான் லா லீகா கோப்பைத் தொடரில் ஒருவரின் அதிகபட்ச கோல் ஆக மாறியுள்ளது.

பார்சிலோனா அணியின் வீரரான மெஸ்சி 44 கோல்களும், ரொனால்டோ கோமன் 45 கோல்களும் அடித்துள்ளனர்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon