மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

சிம்புவுக்காக பாடும் இசையமைப்பாளர்கள்!

சிம்புவுக்காக பாடும் இசையமைப்பாளர்கள்!

VTV கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படத்துக்கு சிம்பு தான் இசையமைக்கிறார். சிம்பு முன்பே இசை ஆர்வம் மிக்கவர், பல பாடல்களை பாடியுள்ளார். ஆனால் இந்த படத்தின் மூலமாக தான் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார், இதில் சிம்புவுக்காக அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதுகுறித்து சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அனிருத்துக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் மூலமாக அவரது தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தற்போது சிம்பு இசையமைப்பில் ஒரு பாடலை பாடவுள்ளார். ‘பிரியாணி’ படத்தில் யுவனுக்காக பல இசையமைப்பாளர்கள் சேர்ந்து ஒரே பாடலை பாடியிருப்பார்கள். அதுபோல சிம்பு ஒவ்வொரு இசையமைப்பாளராக பாட வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon