மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

பள்ளியில் மாணவனுக்கு கத்திக்குத்து!

பள்ளியில்  மாணவனுக்கு கத்திக்குத்து!

ஆசிரியர்களை தெய்வமாகவும், பள்ளிக்கூடங்களை கோயிலாகவும், சாதி மதம் இல்லாமல் சமமாகப் பயிலத்தான் கல்விக் கோயில்களை திறந்தது அரசு. ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது, ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் இருக்கக்கூடாது என்றுதான் ஒரே யூனிபார்ம் உடுத்திவரச் சொல்வது. ஆனால் தற்போது கல்வி கற்பிக்கும் இடத்தில் சாதியும், மதமும், ஊடுருவிவிட்டது. மாணவர்களுக்கு கல்விச் சிந்தனைகள் மாறி, கலவரம் சம்பந்தமான சிந்தனை உருவாகிவிட்டது. பள்ளியில் பேனா பிடித்து பழகக்கூடிய மாணவர்கள், கத்தியைப் பிடிக்கும் சம்பவம் அனைவரின் மனதையும் வருத்தமடையச் செய்திருக்கிறது

கடலூர், மஞ்சக்குப்பம் நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கோஷ்டிகளாகப் பிரிந்து அடியாட்களை அழைத்துவந்து அடித்துக்கொள்கிறார்கள். பிறகு சாதிக் கலவரமாக மாறுகிறது என்று கடந்த ஆண்டு நமது மின்னம்பலம்.காமில் பதிவுசெய்திருந்தோம்.

ஆனால் இன்று வசந்தராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவனை, கடலூர் புதுப்பாளையம் பிளஸ்-1 படிக்கும் மாணவன் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் முதுகிலும், முகத்திலும் கொடுரமாகக் கிழித்துள்ள சம்பவம் மாணவ சமுதாயத்துக்கே ஒரு இழிவாகக் கருதவேண்டும்.

மேலும் மாணவர்களிடம் சாதி கலவரத்துக்கான எண்ணத்தை ஆரம்பித்துவைப்பதற்கான இடமாக பள்ளிகள் இருக்கக்கூடாது என்று காவல்துறையினர் கருதுகிறார்கள்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon