மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

நெடுவாசல் போராட்டம்: அலட்சியப்படுத்தும் மத்திய அரசு !

நெடுவாசல் போராட்டம்: அலட்சியப்படுத்தும்  மத்திய அரசு !வெற்றிநடை போடும் தமிழகம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று, மத்திய பெட்ரோலியத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நெடுவாசல் உள்பட பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளன. ஆனால் இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் தங்கள் வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி நெடுவாசல் கிராம மக்கள் கடந்த 12 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்துவதால் எந்த பாதிப்புமில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக குறைந்த அளவு நிலங்களே பயன்படுத்தப்படும். ஏற்கனவே தோண்டப்பட்ட எண்ணெய்க் கிணறுகளால் விவசாயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.40 கோடி ராயல்டி கிடைக்கும் எனவும் இதன்மூலம் 500க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon