மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 அக் 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திவ்யதர்ஷினி!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திவ்யதர்ஷினி!

ஹைட்ரோ கார்பன் எனும் பெயரில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு கடந்த 15-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, நெடுவாசல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டைப் பகுதிகளில் இரவு பகலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் தங்கர் பச்சான், பாண்டிராஜ் ஆகியோர் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினியும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “ஹைட்ரோ கார்பன் திட்டம் நிலத்தடி நீரைக் குறைத்துவிடும். விவசாய நிலங்களை வீணாக்கி, சுற்றியுள்ள பல கிராமத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிடும். அந்தப் பகுதியின் விவசாயிகள், மக்களின் சம்மதம் இன்றி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தக்கூடாது. விவசாயிகள் இதுபற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். என் தந்தை பிறந்த பேராவூரணிக்கு அருகில் உள்ள தென்னங்குடியிலிருந்து வந்த நான், என் கிராம மக்களுக்காக துணை நிற்பேன்” என்று கூறியுள்ளார்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon