மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

குஜராத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது!

குஜராத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது!

குஜராத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையினர் ஐ.எஸ் தொடர்புடைய இருவரை ஞாயிறன்று கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் மாநிலத்தில் தனித் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட வாசின் ரமோடியா மற்றும் நயீம், முறையே எம்.சி.ஏ மற்றும் பி.சி.ஏ பட்டம் பெற்றவர்கள். சோட்டிலா கோவில் உட்பட குஜராத்தில் இருக்கும் பிற மத வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்திருக்கிறது. இவர்களிடம் வெடி குண்டு தயாரிக்கும் உபகரணங்களும், ஜிகாதி இலக்கியமும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

ஐ.எஸ் அமைப்பின் ஜிஹாதி சித்தாந்தத்தை பின் தொடரும் இவர்களுடைய சில நடவடிக்கைகள் காரணமாக, தீவிரவாத எதிர்ப்பு படை வசீம் மற்றும் நயீமை அதிகாலை ஆப்ரேஷன் ஒன்றின் போது பிடித்திருக்கின்றனர் போலீசார். “ கடந்த மூன்று மாதங்களாக அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் ஸ்கைப், டெலிகிராம், ட்விட்டர் மற்றும் வாட்சப் ஆகிய தளங்கள் வழியே ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் பகுதியில் சோதனைகள் நடத்தி இவர்களை பிடித்தோம்” என குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜே கே பட் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருக்கிறது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon