மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

ரூ.50 லட்சம் சம்பாதிக்கும் சூப்பர் எருமை!

ரூ.50 லட்சம் சம்பாதிக்கும் சூப்பர் எருமை!வெற்றிநடை போடும் தமிழகம்

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த எருமை ஒன்று, அதன் உரிமையாளருக்கு ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் சம்பாதித்துக் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த எருமை மாட்டின் விலை ரூ.9.30 கோடி என்றால் நம்ப முடிகிறதா? ஹரியானா மாநிலம், குருஷேத்ரா நகரைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவருக்கு யுவராஜ் என்று பெயரிடப்பட்ட எருமை மாடு ஒன்று உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ள சித்தரகூட் நகரத்தில் சுரேந்திரபால் கிராமோதியா சார்பில், தீனதயாள் வளாகத்தில், கிராமோதியா மேளா நடைபெற்றது. அதில் அனைவரது கவனத்தையும் இந்த சூப்பர் எருமை ஈர்த்துள்ளது. 9 வயதாகும் இந்த எருமை மாடு 1.5 டன் எடையும், 11.5 அடி நீளமும், 5.8 அடி உயரமும் கொண்டது.

இதுகுறித்து, மாட்டின் உரிமையாளர் கரம்வீர் சிங், ‘யுவராஜ் காளைமாட்டை’ குடும்பத்தில் ஒருவராக என் பிள்ளைபோல் வளர்த்து வருகிறேன். தினசரி யுவராஜுக்கு 20 லிட்டர் பால், 10 கிலோ பழங்கள் குறிப்பாக ஆப்பிள், டர்னிப், 5 கிலோ பச்சைப்புல், 5 கிலோ வைக்கோல் ஆகியவற்றை உணவாகக் கொடுத்து வருகிறேன். இதுமட்டுமின்றி, ஆரோக்கியமாக இருப்பதற்காக தினமும் 5 கிலோமீட்டர் நடைப்பயிற்சியும் கொடுக்கிறேன். இதற்காக நாளொன்றுக்கு ரூ.3000முதல் 4000 வரை செலவு செய்து வருகிறேன்.

இந்த எருமை மாட்டில் இருந்து நாளொன்றுக்கு 10-14 மில்லி விந்தணுக்கள் எடுக்கப்படுகிறது. அதன்படி, மாதத்திற்கு 700-900 மில்லி விந்தணுக்கள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒரு மில்லி விந்தணுவின் விலை ரூ.500க்கும் அதிகமாக விற்பனையாகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த மாடுகள் விற்பனை மேளாவில் யுவராஜ் ரூ.9.3 கோடிக்கு கேட்கப்பட்டது. அதற்கு கரம்வீர் சிங், என்னுடைய குடும்பத்துக்கும், மற்ற கால்நடைகளை பராமரிப்பதற்கும் யுவராஜ் சம்பாதித்துக் கொடுக்கும். இதை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon