மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : பி.வி.ஜானகிராம்

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : பி.வி.ஜானகிராம்

1930ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த பி.வி.ஜானகிராம், சென்னை கலை இயக்கத்தின் முக்கியமான ஓவியரும் சிற்பியும் ஆவார். 1953ஆம் ஆண்டு சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியத்தில் டிப்ளமோ முடித்த இவர், 1962ஆம் ஆண்டு சிற்பத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.

1964-66ஆம் ஆண்டுக்கான புது டில்லி லலித் கலா அகாடமி இவருக்கு தேசிய விருது வழங்கி கௌரவித்தது. 1965ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான நைரோபியிலும் பிரான்ஸிலும் 1967ஆம் ஆண்டு பிரேஸிலும் தனது ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளார். பிரஸ்ஸல்ஸ், வியன்னா, கோபென்ஹேகன், ஆம்ஸ்டெர்டாம், ஓஸ்லோ ஆகிய நகரங்களில் 1968ஆம் ஆண்டு ஐ.சி.சி.ஆர். சமகால இந்திய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கான கண்காட்சியை நடத்தியது. இந்த நிகழ்விலும் பி.வி.ஜானகிராம் கலந்துகொண்டார்.

1976ஆம் ஆண்டு டெஹ்ரானில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்ற மாடர்ன் ஆர்ட் கண்காட்சியில் பங்கேற்றார். ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு கண்காட்சிகளில் கலந்துகொண்டுள்ளார். 1991ஆம் ஆண்டு ‘தி மெட்ராஸ் மெட்டாபர்’ என்ற பெயரில் இப்ராஹிம் அல்கஸி ஒருங்கிணைத்த கண்காட்சி புது டில்லி ஆர்ட் ஹெரிடேஜில் நடைபெற்றது. அதிலும் கலந்துகொண்ட பி.வி.ஜானகிராம் 1995ஆம் ஆண்டு மறைந்தார்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon