மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

மீண்டும் மொபைல் விற்பனையில் நோக்கியா!

மீண்டும் மொபைல் விற்பனையில் நோக்கியா!

உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொழில்நுட்ப சந்தையில் கால் பதித்துள்ளது. நோக்கியா ஸ்மார்ட்போன்களை பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெச்.எம்.டி. குளோபல் எனும் நிறுவனம் வெளியிடுகிறது.

நடப்பு ஆண்டில் புதிதாக 3 ஆண்ட்ராய்டு மொபைல்களை வெளியிடவுள்ளதாக பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் மாநாட்டில் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்று புதிய ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சந்தையில் புதிதாக களமிறங்கும் இந்த நோக்கியா மொபைல்கள் சீனத் தயாரிப்பு மொபைல்களுக்கு கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 3:

இந்த மாடல் மொபைல்களில் 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் 1.3 HQ குவாட்-கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், கூடுதலாக கூகுள் டிரைவ் வசதியும் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 8 MB பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 MB செல்ஃபி கேமரா டிஸ்பிளே பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 2560 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது.

நோக்கியா 5:

இதில், 5.2 இன்ச் 1280 x 720 பிக்சல் கொண்ட டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 2ஜி.பி. ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 13 MB பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், 8 MB செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். திறன்கொண்ட பேட்டரியும் வழங்கப்படுகிறது.

நோக்கியா 6:

5.5 இன்ச் 1920 x 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், ஆர்ட் பிளாக் நிறம்கொண்ட மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. 16 MB பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 MB செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon