மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 அக் 2019

சசிகலாவை காப்பாற்றும் செங்கோட்டையன் : கே.பி.முனுசாமி

சசிகலாவை காப்பாற்றும் செங்கோட்டையன் : கே.பி.முனுசாமி

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தான் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாக செங்கோட்டையன் பொய்யான தகவலைச் சொல்லி சசிகலாவை காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, "ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செங்கோட்டையன் துரோகம் செய்துவிட்டார். சசிகலாவை காப்பாற்ற செங்கோட்டையன் முயற்சி செய்கிறார். சசிகலாவை காப்பாற்றுவதற்காக கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாக பொய் தகவல் சொல்கிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தவரை அவரைப் பார்த்ததாக செங்கோட்டையன் ஏன் கூறவில்லை? உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறுவதை செங்கோட்டையன் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரை நேரில் பார்த்ததாக யாரும் கூறவில்லை. அதிமுக-வுக்கு சம்பந்தம் இல்லாதவர் டி.டி.வி.தினகரன். அதனால் அவரைப்பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அதிமுக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தபிறகு ஓ.பி.எஸ்.ஸின் சுற்றுப் பயண தேதி அறிவிக்கப்படும்’’ என்றார்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon