மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

உ.பி.யில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

உ.பி.யில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

உத்தரப்பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி, மொத்தம் 57.36 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் சட்டபேரவைக்கான தேர்தல் கடந்த 11ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டநிலையில், 5ஆவது கட்டமாக 11 மாவட்டங்களில் அடங்கிய 53 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இன்று காலை 11 மணி நிலவரப்படி 27 சதவிகிதமும், மதியம் 3 மணி நிலவரப்படி 49.19% சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, மாலை ஐந்து மணி அளவில் வாக்குப்பதிவு முடிவடைந்தநிலையில் மொத்தம் 57.36 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற 51 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் 612 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில், 168 பேர் கோடீஸ்வரர்கள். கோடீஸ்வர வேட்பாளர்களில் அதிகபட்சமாக, பகுஜன் சமாஜ் சார்பில் 43 பேர் போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில் 38 பேரும், சமாஜ்வாதி சார்பில் 32 பேரும் கோடீஸ்வர வேட்பாளர்களாவர்.

இன்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவைத் தொடர்ந்து, வரும் மார்ச் 4ஆம் தேதி 6ஆம் கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 8ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, வரும் மார்ச் 11ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon