மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

மகனுக்கு சிகிச்சையளிக்காத பெற்றோருக்கு ஆயுள் தண்டனை!

மகனுக்கு சிகிச்சையளிக்காத பெற்றோருக்கு ஆயுள் தண்டனை!

கனடாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை பட்டினி போட்டு கொலை செய்ய முயன்ற பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது அங்குள்ள நீதிமன்றம். கனடாவில் வசிக்கும் எமில் மற்றும் ரோடிகா ரடிடா தம்பதியினருக்கு மொத்தம் எட்டுப் பையன்கள். அதில் ஒருவர் 15 வயதான அலெக்ஸாண்ட்ரு. சிறுவன் அலெக்ஸாண்ட்ருவுக்கு சிறுவயதிலேயே நீரிழிவு நோய் தாக்கியுள்ளது. இவருக்கு போதிய மருத்துவ வசதிகளை அவரது பெற்றோர்கள் செய்துதரவில்லை என்று கூறப்படுகிறது. அலெக்ஸாண்ட்ருவை சிறுவயதில் இருந்து திட்டமிட்டே புறக்கணித்ததாகவும், வேறெவரும் மருத்துவ உதவிகள் செய்யாமல் இருக்குமாறும் கண்காணித்து வந்துள்ளார்கள்.

தங்களது மகனின் நோயை கடவுள் நிவர்த்தி செய்வார் எனவும், மருந்து மாத்திரைகள் எதுவும் இவனை குணப்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சிறுவனின் நிலை கண்டு மனம் வருந்திய அக்கம்பக்கத்தினர் காவல்துறை உதவியை நாடியுள்ளனர். அவர்களின் குடியிருப்பை சோதனையிட்ட போலீசார் மிகவும் பரிதாப நிலையில் இருந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். சிறுவனை இந்த நிலைக்குத் தள்ளிய பெற்றோர் மீதும் திட்டமிட்ட கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, சிறுவன் அலெக்ஸாண்ட்ரு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து இந்த வழக்கானது வேகம் கொண்டது. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து தீர்ப்பை வழங்கிய நீதிபதி கரேன் ஹார்னர், தண்டனை தீர்ப்பில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். தமது மகன் நோய்வாய்ப்பட்டிருந்தது தெரிந்தும் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, தங்களது மகனை வேண்டும் என்றே மரணத்திற்கு இவர்கள் காரணமாகியுள்ளது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் தம்பதிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம். இவர்கள் இருவரும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் கனடாவின் கால்கரி நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon