மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

கேம் ஆஃப் த்ரான் நடிகர் காலமானார்!

கேம் ஆஃப் த்ரான் நடிகர் காலமானார்!

இங்கிலாந்தின் உயர்ந்த மனிதன் என, கடந்த 2007ஆம் ஆண்டு கின்னஸ் புக்கில் இடம்பெற்ற நெய்ல் பிகில்டன் நேற்று முன்தினம் மரணமடைந்தார். சுமார் 7 அடி 6.25 இன்ச் உயரம்கொண்ட இவர் சனிக்கிழமை இதயக்கோளாறு காரணமாக காலமானார்.

இவர் கேம் ஆஃப் த்ரான், எக்ஸ்-மேன் பஸ்ட் கிளாஸ், ஜுபிடர் அச்செண்டிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்னர் USA கூடைப்பந்து அணியில் ஒரு வீரராக விளையாடி வந்துள்ளார். இவரின் இறப்பு குறித்த தகவல் முகநூல் பக்கத்தில் வெளியானது.

இவரின் ரசிகர்கள் மற்றும் உடனிருந்த பலரும் தனது வருத்தங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon