மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

மாருதி ரிட்ஜ் மாடல் கார் விற்பனை நிறுத்தம்!

மாருதி ரிட்ஜ் மாடல் கார் விற்பனை நிறுத்தம்!வெற்றிநடை போடும் தமிழகம்

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் ரிட்ஜ் மாடல் கார் விற்பனையை நிறுத்துவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கார் தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் மாருதி சுசுகி, டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சியாஸ், எர்டிகா, ஆல்டோ, ஸ்விஃப்ட், செலரியோ, பலெனோ, ஸ்விஃப்ட் டிசையர், ஓம்னி, ரிட்ஜ் உள்ளிட்ட கார்களை இந்தியாவில் தயாரித்து இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், ரிட்ஜ் மாடல் கார் விற்பனையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரிட்ஜ் மாடல் கார்கள், இதுவரையில் 4 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. உற்பத்தி திறனில் சீரமைப்பு நடவடிக்கையாக இக்கார்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சந்தையில் புதிதாக அறிமுகம் செய்துள்ள இக்னிஸ், பலெனோ, செலரியோ உள்ளிட்ட மாடல்கள் விற்பனையில் அதிக கவனம் செலுத்தவிருப்பதாகவும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon