மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

போரடிக்குது யாரயாவது வம்பிழுக்கணும்னு தோனுது- அப்டேட் குமாரு

போரடிக்குது யாரயாவது வம்பிழுக்கணும்னு தோனுது- அப்டேட் குமாரு

நாட்டுல இங்க ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் இந்த இணைய கும்பல்கள் எப்பவும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. இப்பக்கூட நைட்டிப் புரட்சி, டவுசர் புரட்சினு புதுசா ஒரு புரட்டா ஆரம்பிச்சு ஜாலியாதான் இருக்காங்க. புரட்சி என்ற வார்த்தைய குழிதோண்டிப் பொதச்சு பூ போட்டு அதுமேல மூணு சத்தியம் வேற பண்ணிட்டாங்க, நான் அங்க தியானம் பண்ணி யோகியாக ட்ரை பண்றேன். நீங்க அப்டேட்ஸ பாருங்க...

\\ஸ்டெல்லா ராம்

சில பதிவுகளைப் பார்த்து விட்டு அப்படியே கடந்து விட வேண்டும்..

உள்ள போய் கமெண்டிட்டா சாக்கடை நம்ம மேலயும் தான் தெறிக்கும்\\

\\@jeytwits

Sorry என்பது மட்டுமல்ல..'சாப்பிட்டியா' என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தை தான்..\\

\\Mohamed Salman

பூ, குழந்தைகள், கீர்த்தி சுரேஷ் படம் போடுறதுக்கு எதுக்குமா இன்ஸ்டாகிராம் வர்றீங்க?\\

\\Boobathi Kalaivanan

நைட்டி போட்டு போட்டோ போடுறாதுக்கு பெயர் புரட்சின்னா ஆங் சாங் சூகி செய்ததற்கு என்ன பெயர்\\

\\‏@manipmp

எல்லா சமையல் நிகழ்ச்சியையும் பார்த்துட்டு கடைசியில் உப்புமா செய்யும் மனைவியைப் போலத்தான் மாற்றத்தை விரும்பும் மக்களும்\\

\\@HaridiBaby

சட்டையின் மேல் பட்டனை போடுவதா, வேண்டமா என்பதை கழுத்தில் போட்டிருக்கும் தங்க சங்கிலியே முடிவு செய்கிறது!\\

\\@srivishiva

"வீட்டுல இருந்து ஆபீஸ் எவ்ளோ தூரம்?"

"ஆறு இளையராஜா பாட்டு" \\

\\@mpgiri

வாத்யார் சுஜாதாவுக்கு நினைவஞ்சலிகள்.

போரடிக்காத எழுத்துக்கு சொந்தக்காரர். இன்னைக்கு எழுத்தாளர்னு போட்டுக்கறவங்க கொத்தற கொத்துலாம் ப்பா..\\

\\‏@withkaran

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைங்கிற பேரு ஏதோ காது மூக்கு தொண்டை நிபுணர்ங்கிற டோன்லயே கேக்குது..\\

\\@mofra2

"தமிழில்" "மன்னிப்பு" கேட்பதை அவமானமாகவும்.

"ஆங்கிலத்தில்" "சாரி" என்று சொல்வதை கௌரவமாகவும் நினைக்கிறார்கள் நம் மக்கள்!\\

\\@Asalttu

அதென்ன பூரா மல்டி மில்லியனரும் பான்டிச்சேரில கார் வாங்குறிங்க .\\

\\@TiruppurNattama

போரடிக்குது யாரயாவது வம்பிழுக்கனும்னு தோனுது.\\

\\மதுரை சத்யா

i love u .........

என்று நீ சொன்ன பிறகே

முதன் முறையாய்

ஆங்கிலம் விரும்ப

ஆரம்பித்தேன்.. !

ஐயாம் பெயில் இன் இங்கிலீஷ்\\

-லாக் ஆஃப்

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon