மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

சென்னை வருகிறார் ஜனாதிபதி!

சென்னை வருகிறார் ஜனாதிபதி!

வருகிற மார்ச் 3ஆம் தேதி சென்னை வரும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தாம்பரத்தில் நடைபெறும் விமானப்படை விழாவில் அன்று பங்கேற்கிறார்.

தாம்பரம் விமானப்படைப் பயிற்சி தலைமை கமாண்டர் ஏர்மார்‌ஷல் எஸ்.ஆர்.கே. நாயர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறுவதாவது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற மார்ச் 2ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சி செல்கிறார். அன்று மாலை 4 மணிக்கு அங்கு நடைபெறும் கருத்தரங்கில் அவர் பங்கேற்கிறார். அதன்பின்னர், கொச்சியில் இருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். 3ஆம் தேதி தாம்பரத்தில் நடைபெறும் விமானப்படை விழாவில் அவர் பங்கேற்கிறார்.

125வது படைப் பிரிவு ஹெலிகாப்டர் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்குகிறார். இந்த விழாவில் நடைபெறும் அணி வகுப்பில் எம்.ஐ.17 மற்றும் 35 ரக ஹெலிகாப்டர் இடம்பெறும். மேலும் 125-வது படை பிரிவு ஹெலிகாப்டர்கள் வானில் சாகசத்தில் ஈடுபடும். இந்த விழாவில் கவர்னர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விமானப்படை அதிகாரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon