மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

மத்திய குழு வருகை: நாராயணசாமி

மத்திய குழு வருகை: நாராயணசாமி

புதுச்சேரியில் வறட்சியால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வரும் மத்திய குழு, வருகிற 5ஆம் தேதி புதுவை, காரைக்கால் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.

புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இதுகுறித்து, இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: புதுவை மாநிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் வறட்சி நிவாரணம் வழங்குவது என்று சட்டசபையில் முடிவுசெய்தோம். மேலும் டெல்லி சென்று மத்திய வேளாண்துறை அமைச்சரை சந்தித்து வறட்சி நிவாரணம் வழங்கும்படியும் கேட்டோம்.

இத்துடன் மத்திய குழுவை அனுப்பி வறட்சிப் பகுதியை பார்வையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். அதன்படி மத்திய அரசு, வருகிற 5ஆம் தேதி மத்திய குழுவை புதுவைக்கு அனுப்பிவைக்கிறது.

அவர்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். பின்னர், இது சம்பந்தமான அறிக்கை மத்திய அரசுக்கு தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து, மத்திய அரசு வறட்சி நிவாரணம் வழங்கும். அதற்கு முன்னதாகவே, இடைக்காலமாக வறட்சி நிவாரண நிதியை வழங்குவதற்கு புதுவை அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்று கூறினார்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon