மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

டிரம்புக்கு ஆதரவாகச் செயல்பட்ட மாணவன்!

டிரம்புக்கு ஆதரவாகச் செயல்பட்ட மாணவன்!

அமெரிக்காவில் டிரம்ப் அதிபரானதைத் தொடர்ந்து, வெளிநாட்டு மக்களுக்கு எதிரான அவரது செயல்பாடுகளால் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆனால் 19 வயதான கல்லூரி மாணவன் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு இருக்கிறான். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக தனது பெண் பேராசிரியர் பேசியதை ஒரு மாணவன் வீடியோ எடுத்துள்ளான். உளவியல் பேராசிரியரான ஒல்கா பெர்ஸ், டிரம்ப் மேலாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுகிறார் என்று விமர்சனம் செய்து வகுப்பறையில் பேசியுள்ளார். ஓ’நெயில் என்ற அந்த மாணவன், தான் எடுத்த அந்த வீடியோவைக் கொண்டு பேராசிரியரை மிரட்டியுள்ளான்.

19 வயதான நெயில், டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளன். அவன், தான் எடுத்த வீடியோவை கல்லூரியில் உள்ள குடியரசுக் குழுவினரிடம் காட்டியுள்ளான். அவர்கள் பேராசிரியர் பெர்ஸ் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் கல்லூரியின் விரிவுரையாளர்களின் இணையதளப் பகுதியில் பதிவிட்டனர். இதனால் கல்லூரியில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த மாணவனை விசாரித்த கல்லூரி நிர்வாகம் நெயிலை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon