மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

நெடுவாசலில் திமுக எம்.எல்.ஏ., விரட்டியடிப்பு!

நெடுவாசலில்  திமுக எம்.எல்.ஏ., விரட்டியடிப்பு!

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும்நிலையில், அதில் கலந்துகொள்வதற்காகச் சென்ற திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்துசெய்ய வலியுறுத்தி, உரிமை மீட்புக் குழு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்று வருகிறது.

அப்போது இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும், தற்போதைய திமுக எம்.எல்.ஏ.,வுமான ரகுபதி கலந்துகொள்வதற்காக பந்தலுக்குள் வந்து அமர்ந்தார். உடனே உண்ணாவிரதப் போராட்டக்காரர்கள் அவரிடம், நீங்கள் மத்திய அமைச்சராக முன்பு இருந்தபோதுதானே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு மக்களைப் பற்றியும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சிந்திக்காமல், இப்போது அரசியல் செய்வதற்காக இங்கு கலந்துகொள்ள வருகிறீர்களா என்று கோபமாகப் பேசினர். மேலும் நீங்களாக இங்கிருந்து சென்றுவிட்டால்தான் நல்லது என்று எச்சரித்தனர்.

அதையடுத்து, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று நினைத்து அங்கிருந்து ரகுபதி எம்.எல்.ஏ., கிளம்பிச் சென்றார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon